சில்வர் ஓக்
அறிவியல் பெயர் :
கிரிவில்லியா ரொபஸ்டா
பொதுப்பண்பு :
- இது நடுத்தர அளவுடைய இலையுதிர்மரமாகும்.
- கிளைகள் அகன்றதாகவும், விண்னை நோக்கியிருக்குமாறு காணப்படும்.
- மரப்பட்டையானது வெளிர் சாம்பல் முதல் அடர் சாம்பல் நிறமுடையதாக காணப்படும்.
பரவல் :
- இது இந்தியாவிற்கு அறிமுகபடுத்தப்பட்ட மரமாகும்.
- இந்தியாவில் மலைபிரதேசங்களில் அதிகமாக டீ மற்றும் காபி எஸ்டேட்களில் பயிரிடப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளரும் மரமாகும்.
மண் :
வண்டல் மண் மற்றும் களிமண்ணில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2300 மீட்டர் உயரம் வரை வளரும்.
மலையளவு :
600-1700 மில்லிமீட்டர்.
வெப்பநிலை :
23 – 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும். எனவே சூரிய ஒளி அதிகமாக தேவைப்படுகிறது.
- இது தீக்கு பகுதியளவு எதிர்ப்புத் தன்மைக் கொண்டது.
- மறுதாம்பு மூலம் வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
மிதமான இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மிதமான வளர்ச்சி
உயரம் :
30-35மீட்டர்.
இயற்கை மறு உருவாக்கம்:
- இது இயற்கை மறு உருவாக்கத்திற்கு ஏற்புடையதல்ல.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:-
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- விதையானது கிளைகளை வெட்டி சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 24000 - 105000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 60-80 சதவிகிதம் ஆகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும். ஏனெனில் இம்மர விதைகள் எண்ணெய் விதைகள் வகையை சேர்ந்தது.
விதை நேர்த்தி
மரப்பண்ணை தொழில்நுட்பம்:
- மணல் மற்றும் உரம் கலந்த விதையானது தாய்பாத்தியில் விதைக்கப்படுகறது.
- தாய்பாத்தி விதைப்பிற்கு நவம்பர் - டிசம்பர் மாதம் சாதகமானது.
- முளைப்புத் தன்மை 10 நாட்களில் ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் முடிவரைந்துவிடும்.
- பூவாளி மூலம் நீர் தொடர்ந்து அளித்தல் பரிந்துரைக்கப்படுகிறது.
- ஒரு மாத வயதுடைய நாற்றுகள் வளர் ஊடகம் அடங்கிய பாலிதீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- பருவ மழை சமயத்தில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
- மழைபொழிவு அதிகமுள்ள இடங்களில் தரமான நாற்றை நடுவதால் நல்ல மகசூலை பெறலாம்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- களைகள் எடுப்பது மற்றும் பக்க கிளைகளை அகற்றுவது அவசியமாகும். நிலத்தை உழுவது அவசியமான ஒன்றாகும்.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 4000 – 4500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
- வாழை, தக்காளி, மிளகு ஆகியவை ஊடுபயிரிடலாம்.
- டீ, காபி போன்றவற்றில் நிழல் மரமாக பயிரிடப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- மரம் கட்டுமான பணிகளுக்காகவும், உள் கட்டுமான பணிகளுக்கம் மற்றும் ஒட்டுப்பலகை தயாரிப்பிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
கோந்து மற்றும் பிசின்:
- இது நல்ல கரைதிறன் உடையது. பாகுதன்மை உடையது மற்றும் நிராற்பகுப்பிற்கு எதிர்த்தன்மையுடையது.
- இதனுடைய கோந்து தொழில்சார்ந்த பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது.
பாதுகாவலான இடம் (அ) நிழல்:
- டீ மற்றும் காபி பயிர்களுக்கு நிழல்தரக்கூடிய மரமாக உள்ளது.
- இதன் கிளைகள் அமைப்பு முறை காற்றுத் தாக்கக் கூடிய மற்றும் மேற்பரப்பு ஆவியாகக் கூடிய பகுதிகளில் வேலி போன்று ஏற்புடையதாக உள்ளது.
-->