கோந்து தரும் வேல மரம்
அறிவியல் பெயர் :
அகேசியா சினேகல்
பொதுப்பண்பு :
- சிறிய முட்டைகளை உடைய இலையுதிர் மரமானது 4-9 மீ உயரத்திற்கும் 30-60 செ.மீ சுற்றளவும் வளரக்கூடியது.
- பழுப்பு நிற மரப்பட்டைகளை உடையது. இரு இலை அமைவு, பூக்கள் வெந்நிறமுடையது.
- நெற்றுகள் 7 செ.மீ நீளமும் 2 செ.மீ அகலமும் உடையது.
பரவல் :
- இந்தியாவில் வறண்ட மண்டலங்களுக்கு உகந்தது.
- தென்கிழக்கு பஞ்சாப், குஜராத் பகுதிகள், ஆரவல்லி பாறைக்குன்றுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
வாழிடம் :
வறண்ட வெப்ப மண்டல காடுகள் மற்றும் வெப்ப மண்டல் முள் காடுகளில் காணப்படுகிறது
மண் :
மலைப்பகுதிகளில், மணற்பகுதிகளில் மற்றும் நிலையற்ற மணல் பகுதிகளில் வளரக்கூடியது.
மண் pH :
5.5 – 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
100 - 700மீ
மலையளவு :
>600 மி.மீ
வெப்பநிலை :
20-45 செல்சியஸ்
நிலப்பரப்பு :
சமவெளி
மரப்பண்பு :
- அதிக சூரிய ஒளி விரும்பி, உறைபனி மற்றும் கடும் வறட்சியை தாங்கவல்லது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மெதுவாக வளரக் கூடியது.
உயரம் :
4-9மீ
இயற்கை மறு உருவாக்கம்:
- தகுந்த சூழ்நிலையில் மறு உருவாக்கம் நடைபெறும்.
- முளைப்பு மேல்நோக்கி வளரக்கூடியது.
- குறைந்த வளர்ச்சியை உடையது. 8-13 செ.மீஃவருடம்.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விதைப்பின் மூலம் மறு உருவாக்கம் செய்யலாம்.
பயிர்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- சிறு வயது முதலே நல்ல வளமான விதைகளை தரவல்லது, கனிகள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் முதிர்ச்சி அடையும்.
- சேகரிக்கப்பட்ட கனிகளை உலர்த்தி, காயவைத்து விதைகளை எடுத்தல் வேண்டும்.
விதை நேர்த்தி:
- கந்தக அமிலத்துடன் நேர்த்தி செய்வதால் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
- வெந்நீரில் 24-48 மணிநேரம் வைத்தல் வேண்டும்.
- விதைத்த 4 நாட்களில் விதைகள் முளைத்து விடும்.
நாற்றாங்கால் தொழில் நுட்பம்:
- 1.8மீ X 0.3 - 0.45மீ அளவில் 45 செ.மீ ஆழத்தில் நடுதல் அவசியம்.
- 4-5 நாட்களில் முளைத்து விடும்.
- ஒரிரு களையெடுத்தல் அவசியம்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஓர் வருட நாற்றுகள் 30 செ.மீ குழிகளில் நடுதல் வேண்டும்.
- ஆழ் நடவு செய்தல் அவசியம்.
பயிர் மேம்பாடு:
- முதல் 4-5 வருடத்திற்கு வேலி அமைத்து கால்நடை மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து காத்தல் அவசியம்.
- முதல் இரண்டு வருடங்களுக்கு களையெடுத்தல் அவசியம்.
- நோய் இந்தியாவில் எவ்வித பூஞ்சான நோய்களும் தென்படவில்லை.
- பூச்சி தாக்குதலுக்கு உட்படும்.
ஊடுபயிர் சாகுபடி :
- தர்பூசணி, சிறிய தானியங்கள் மற்றும் தீவனப்பயிர்களை ஊடுபயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
அரபிக் - கோந்து
- கோந்து தயாரிக்கவும், தோல் மற்றும் மை தயாரிக்கவும் பயன்படுகிறது.
தீவனம்:
- இலைகள் மற்றும் நெற்றுகள் அதிக புரதமுடையது.
- ஒட்டகத்திற்கும், ஆடுகளுக்கும் தீவனமாக பயன்படுகிறது.
மரக்கட்டை:
- கடினமானது, உறுதியானது மற்றும் மெருகுவானது.
- வண்டிச் சக்கரம், வேலி மற்றும் வேளாண் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.
எரிபொருள்:
- நல்ல எரிபொருளாகவும் அதிக கலோரி மதிப்புடையது – 3200 கி.கலோரி/கி.கி நல்ல மதிப்பினை உடைய கரியை தரவல்லது.
-->