ஆச்சா மரம்
அறிவியல் பெயர் :
ஹார்டுவிக்கியா பைனேட்டா
பொதுப்பண்பு :
- ஆச்சா மரம் ஓரளவு உயரமாக வளரக்கூடிய மரமாகும்.
- மரப்பட்டை வெண்மை நிறமுடைது மற்றும் மென்மையனது.
- இலையானது சாம்பல் கலந்த பச்சை நிறமானது.
- பூக்கள் சிறியது மற்றும்; மஞ்சள் நிறமுடையது.
- நெற்றானது காற்றில் பறக்கும் தன்மை கொண்ட இறகு போன்ற வடிவமுடையது.
பரவல் :
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
அனைத்து மண் வகைகளிலும் வளர்கிறது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
300 மீ உயரம் வரை வளர்கிறது.
மலையளவு :
250 - 1500மி.மீ
வெப்பநிலை :
22 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி பகுதிகளிலும் சிறிது சரிவான பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது.
மரப்பண்பு :
- மிதமான ஒளி விரும்பி மரமாகும்.
- நிழல் தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- சாதகமான சூழல் மற்றும் தகுந்த மழைப்பொழிவு, மண் வளம் இருப்பின் இயற்கையாக விதைகள் மூலம் வளரும் தன்மை கொண்டது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- விதையானது இலேசானதாக இருக்கும்.
- சூரிய ஒளியில் நெற்றுகள் 3 – 4 நாட்கள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 4800 - 5300 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 60-70 சதவிகிதம் ஆகும்.
விதை நேர்த்தி:
- குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பு மே – ஜுன் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- தாய்பாத்தியானது தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 3 வாரங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது. விதைகள் 5 வாரங்களில் முற்றிலுமாக முளைத்துவிடுகிறது.
- வெயில் அதிகமாக உள்ள இடங்களில் தாய்பாத்திக்கு நிழலை ஏற்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.
- தாய்பாத்தியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
- இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றானது வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடம் அல்லது 2 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஒரு வருடம் அல்லது 2 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 2 x 2 மீ அல்லது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- வருடத்திற்கு ஒரு முறை களையெடுக்க வேண்டும்.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் தோராயமாக 3000 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
மரக்கட்டை
- இதன் மரக்கட்டை கடினமான மற்றும் உறுதியானது.
- இது பாலம் கட்டவும், வீடு கட்டவும், வேளாண் உபகரணங்கள் செய்யவும் மற்றும் மாட்டுவண்டி சக்கரங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
தீவனம்:
- இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும்.
எரிப்பொருள்:
- இதன் மரம் நல்ல எரிபொருளாகும்.
நார்:
- இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் நார் கயிறு தயாரிக்க பயன்படுகிறது.
-->