பலா மரம்
அறிவியல் பெயர் :
அர்டோகார்பஸ் ஹெட்டிரோபில்லஸ்
பொதுப்பண்பு :
- இது ஒரு பெரிய பசுமை மாறா மரமாகும்.
- மலப்பட்டையானது அடர் சாம்பல் நிறத்திலிருக்கும்.
- இலைகளானது அடுத்தடுத்து அமைந்தியுக்கும் மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
- ஒருபால் மலர்களையுடையது. பெரியதாக காணப்படும்.
- கனியானது பெரியது. 10 – 30 கிலோ எடையுடையது.
- மஞ்சள் நிற சதைப்பகுதி சாம்பல் நிற விதைகளை சுற்றி காணப்படும்.
பலா வகைகள் :
- வெளிபலா, சிங்கப்பூர், ஹைபிரிடு ஜாக், பன்ருட்டி, தஞ்சாவூர் ஜாக், பரலியாறு 1, பி.எல்.ஆர் 1, பி.எல்.ஆர் (ஜே) 2, மற்றும் பி.பி.ஐ 1 போன்றவை பலா மரங்களில் வேறுபட்ட வகைகளாகும்.
பரவல் :
வாழிடம் :
எல்லா நாடுகளிலும் வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடியது.
மண் :
செம்மண், செம்மண் கலந்த வண்டல் மண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1600 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 2400 மி.மீ
வெப்பநிலை :
16 – 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.
வளரியல்பு :
பசுமைமாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- பழுத்த பழத்திலிருந்து விதைகள் எடுக்கப்படுகிறது.
- நிழலில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- இதன் விகைள் எண்ணெய் வகையை சேர்ந்தது என்பதால் குறைந்த நாட்களே முளைப்புத்திறன் கொண்டிருக்கும்.
- ஒரு கிலோ விதையில் தேராயமாக 45 - 90 விதைகள் இருக்கும்.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகளின் முளைப்புத்திறனானது 70 – 75 சதவிகிதமாகும்.
- நாற்றானது நேரடியாக பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
- இவ்வகை உற்பத்திக்கு பெரிய பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்கதுவங்குகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- குழியில் 10 கிலோ எரு மற்றும் 1 கிலோ வேப்பம்பிண்ணாக்கு சேர்க்கப்படுகிறது.
- கட்டுரக நாற்றுகள் ஜுன் - டிசம்பர் மாத கால கட்டத்தில் 8 x 8 மீ இடையெளியில் நடப்படுகிறது.
- நாற்று நடவிற்கு ஜுலை மாதம் ஏற்றதாகும். இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- மரம் வளர்ந்து காய்க்க துவங்கியதும் மரங்களுக்கிடையேயான இடைவெளி 12 x 12 மீ என இருக்க வேண்டும்.
- இறந்த கிளைகளை மரத்திலிருந்து நீக்க வேண்டும். இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரம் என்பதால் மரங்களுக்கிடையேயான இடைவெளி அதிகப்படியாக இருக்க வேண்டும்.
ஊடுபயிர் சாகுபடி :
- பயறு வகைப் பயிர்களையும், காய்கறிகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இதன் பழம் உணவாக பயன்படுகிறது.
- இதன் மரம் சிறிய ரக வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- காப்பி தோட்டங்களில் நிழலுக்காக இம்மரம் பயிரிடப்படுகிறது.
- மிளகு வளர்ப்பிற்கு இம்மரம் பயன்படுகிறது.
மருத்துவ பயன்
- வேர் காயம் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், ஆஸ்துமா போன்றவற்ளை குணப்படுத்த வல்லது.
- இதனை கலந்து பாம்பு விஷமுறிவிற்கும் பயன்படுத்தலாம்.
கோந்து
- 71.8% ரெசின் கிடைக்கப்பெறும்.
- இவை வார்னிஸ்கலக்கப் பயன்படும்.
-->