வில்வம்
அறிவியல் பெயர் :
ஏகில் மார்மிலஸ்
பொதுப்பண்பு :
- வில்வம் ஒரு மெதுவாக வளரக்கூடிய மிதமான அளவுடைய மரமாகும்.
- மரப்பட்டையானது சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் 1.5 – 2 செ.மீ அளவுடையது மற்றும் மஞ்சள் நிறமுடையது. மணம் கமலக்கூடியது.
- காயானது கடினமான ஓடுடையது.
- காய் ஓடானது பச்சை நிறமாகவும் கனிந்த பிறகு மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது.
- கனியானது 8 – 15 அறைகளுடையது. ஒவ்வொரு பகுதியினுள்ளும் 6 – 10 விதைகளை கொண்ட மஞ்சள் நிற கூழானது நிரம்பியிருக்கும்.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.
மண் :
A well- drained, sandy loam soil is ideal. It can thrive even on poor, clay and stony soils.
மண் pH :
5-8
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
570 – 2000 மி.மீ
வெப்பநிலை :
48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள் லுலம் இயற்கையாக நடைபெறும் இனப்பெருக்கம் போதுமான அளவு வெற்றியடைவதில்லை.
- இம்மர விதைகள் விதையுறக்கம் கொண்டது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் தாய்பாத்தியில் சில நாட்களிலேயே விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தியானது நல்ல எரு மற்றும் மணல் கொண்டு உரமூட்டப்படுகிறது.
- விதைகள் 3 வாரங்களில் முளைத்துவிடும்.
- நாற்றுகள் அதன் தாய்மரத்தை பேன்று இருப்பதில்லை. தாயை காட்டிலும் சற்று மாற்றங்கள் காணப்படும்.
- வேர்கள் மூலம் நாற்று உற்பத்தி செய்வது சிறந்ததாகும்.
- பக்க மொட்டுகளை கொண்டு உடல இனப்பெருக்கம் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்முறை 90 சதவிகிதம் வெற்றியை தரக்கூடியது. ஜுன் - ஜுலை மாதம் இம்முறை உடல இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாகும்.
- கட்டுசெடி வளர்பபு மூலமும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- 7 வாரங்கள் கழித்து நாற்றுகள் நாற்றங்காலிலிருந்து பிடுங்கி வளர் இடுபொருட்கள் அடங்கிய பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 90 செ.மீ3 என இருக்க வேண்டும். குழியினுள் மேல் மண், 25 கி.கி பண்ணை எரு மற்றும் 50 கி காமா பி.ஹெச்.சி ஆகிய கலவை குழியின் அடிப்பகுதியிலிருந்து 6 செ.மீ வரை நிரப்பப்படுகிறது.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 8 x 8 மீ அல்லது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- பிப்ரவரி – மார்ச் அல்லது ஜுலை – ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் நடப்படுகிறது.
- பண்ணையை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பயிர் வகைகள் ஊடுபயிராக பயிர்களாக விதைக்கலாம்.
- காய் வெடிப்பு மற்றும் காய் விழுதல் இம்மரத்தில் ஏற்படும் பெரிய பாதிப்பு ஆகும்.
- முறையாக நீர் பாய்ச்சப்பட்டால் இவ்வகையான பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
- காற்று தடுப்பானாக பயிரிடப்படும் தோட்டங்களில் போராக்ஸ் கொண்டு தெளிக்க வேண்டும்.
- பக்க மொட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் 4 – 5 வருடத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
- வில்வம் காய் முதிர 8 10 மாதங்கள் அல்லது 10 – 12 மாதங்களில் பழுத்து முதிர்வடைகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு கிலோ வில்வம் கனி தேராயமாக 100 - 120 என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் உறுதியானது மற்றும் புதிதாக வெட்டப்பட்ட மரம் மணம் கமலக்கூடியது.
- இதன் மரம் சிற்பம் செய்ய பயன்படுகிறது.
- கைபிடிகள் தயாரிக்க, மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- அத்தியாவசியமான எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.
தீவனம்:
- இலைகள் மற்றும் குச்சிகள் தீவனமாக பயன்படுகிறது.
கோந்து:
- விதைகளை சுற்றி அதிகமான கோந்துகள் கிடைக்கப்பெறும் வீட்டில் மற்றும் நகைக்கடைகளில் இவ்வகையான கோந்து அதிகம் பயன்படுகிறது.
-->