வேப்ப மரம்
அறிவியல் பெயர் :
அசாடிராக்டா இண்டிகா
பொதுப்பண்பு :
- வேப்ப மரம் இந்தியாவை தாயகமாக கொண்ட ஒரு சமூக, சமய முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும்.
- இம்மரம் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இம்மரம் அடர் பச்சை நிறமுடை பசுமையான மரமாகும்.
- மரப்பட்டையானது சாம்பல் நிறத்திலும், உள்பகுதி பளபளப்பான வெண்மை நிறத்திலும் காணப்படும்.
- கனியானது மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையது.
- ஒரு கனிக்கு ஒரு வரையிருக்கும்.
பரவல் :
- இந்தியாவின் வறண்ட காடுகளில் வளரும் மரமாகும்.
வாழிடம் :
வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் மற்றும் முட்புதர் காடுகளில் வளரும் மரமாகும்.
மண் :
அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
450 – 1100 மி.மீ
வெப்பநிலை :
42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளிப்பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- இளம் பருவத்தில் ஓரளவு நிழலை தாங்கி வளரும்.
- அதிகப்படியான பனியை தாங்கி வளராது.
- இம்மரத்தின் ஆழமான வேர்கள் வறட்சி காலங்களிலும் பசுமையாக வைக்கிறது.
- இவை மறுதாம்பு மூலம் தழைத்து வளரும்.
- வேர் கிழங்கு மூலமும் இனபொருக்கமடைகிறது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இயற்கையாக விதைகள் மூலமாகவும், பறவைகளின் எச்சங்கள் மூலமாகவும் இனப்பெருக்கடைகின்றது.
- இவை முட்புதர்களிலும், வரப்போரங்களிலும் எளிமையாக வளரும் தன்மை கொண்டது.
- ஆனால் கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக அவசியம். மறுதாம்பு மற்றும் வேர்கிழங்கு மூலம் நன்கு வளரக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் தேராயமாக 3300 - 5000 விதைகள் இருக்கும்.
- இவ்விதை எண்ணெய் விதை என்பதால் நீண்ட நாட்களுக்கு சேகரித்து வைக்க முடியாது.
- 20 x 10 செ.மீ அல்லது 20 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் பை;ககு 2 விதைகள் என விதைக்கப்பட வேண்டும்.
- அதிகப்படியான களிமண் நாற்று வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
- ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- முளைத்து வளர்ந்த நாற்றை பைக்கு ஒன்று என மறுநடவு செய்ய வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஒரு வருட வயதுடைய நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- நடவானது ஜுலை – ஆகஸ்ட் காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
நேரடி விதைப்பு முறை :
- இம்முறையில் விதையானது நேரடியாக நிலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
நாற்று நடவு :
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- நடப்படுவதற்கு முன் குழியில் 5 கிலோ எரு மற்றும் 25 – 50 கிராம் டி.ஏ.பி போன்றவற்றை இட வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
பாராமரிப்பு :
- அவ்வப்போது களைகள் எடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.
தண்ணீர் பாய்ச்சுதல் :
- வறட்சி காலங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- உவர்நிலங்களில் கோடை காலங்களில் நீர் பாய்ச்சுவது மிக அவசியமாகும்.
- நாற்றின் அடிப்பகுதியை மூடாக்கு செய்வதின் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள முடியும்.
மரப்பராமரிப்பு :
- களையெடுத்தல் நாற்றின் வளர்ச்சிக்கு மிக அவசியமாகும். டிராக்டர் கொண்டு உழுதல் அதிகப்படியான களைகள் வளர்வதை தடுக்கலாம். உழுதல் வேர் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
- இயற்கையாக முளைத்த மரங்களில் மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க ஒரு சில வேப்ப மரங்களை நீக்க வேண்டும்.
- 2 – 3 வயதானவுடன் மரங்களுக்கிடையேயாய இடைவெளிகள் 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- நாற்று நடவு மூலம் உருவாக்கப்பட்ட பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- மரத்தேவைக்காக 35 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
- எரிபொருளுக்காக 8 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
- பயறுவகைகள், வேர்க்கடலை, காய்கறிகளை ஊடுபயரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், மரச்சாமான்கள் செய்யவும், கைபிடிகள் தயாரிக்க, மாட்டுவண்டி பாகங்கள் தயாரிக்க மற்றும் படகு தயாரிக்கவும் பயன்படுகிறது.
- இதன் இலை 12 – 30 சதவிகிதம் புரோட்டீன் கெர்டுள்ளதால் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இதன் விதைகள் 20 – 30 சதவிகிதம் எண்ணெய் தரவல்லது.
- வேப்ப எண்ணெயில் அசாடிராக்டின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.
- இதக் பட்டை 12 – 14 சதவிகித டானின் கொண்டது.
- வேப்பம் பிண்ணாக்கு ஒரு சிறந்த எருவாகும்.
தீவனம்:
- இலைகள் கால்நடைத் தீவனமாக பயன்படுகிறது.
-->