பூ மருது
அறிவியல் பெயர் :
டெர்மினேலியா பேனிகுளேட்டா
பொதுப்பண்பு :
- பூ மருது ஒரு பசுமை மாறா மரமாகும்.
- இலைகள் இதய வடிவானது மற்றும் எதிரெதிரே அமைந்திருக்கும்.
- பூக்கள் வெளிர் வெள்ளை நிறமுடையது.
- காய் பெரியது மற்றும் சிறிய இரு இறகு போன்ற வடிவமுடையது.
பரவல் :
வாழிடம் :
பசுமை மாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
நீர் தேங்காத ஓரளவு வளம் மிக்க மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
4.5-7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
900 - 1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 - 5000 மி.மீ
வெப்பநிலை :
13 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
ஈரமான நீர் தேங்காத நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வளரும் தன்மையற்றது.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
பசுமை மாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள் மற்றும் மறுதாம்பு மூலம் இனப்பெருக்கமடைகிறது.
- இம்மரம் நீர் நிலை பகுதிகளில் பரவலாக வளரும்.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- இம்மரம் வருட வருடம் அளவுக்கததிகமாக காய்க்கவல்லது.
- பழுத்த காயானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிராம் விதையில் 14 – 15 விதைகளிருக்கும்.
- இதன் விதைகள் சாதாரணமாக 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்கவைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 1 நிமிடம் ஊர வைக்கப்பட்டு பின் குளிர் நீரில் 48 மணி நேரம் ஊரவைக்கப்படுகிறது.
- விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைப்பது சிறந்ததாகும்.
- விதைக்கப்பட்டபின் பூவாளி கொண்டு தினமும் நீர் பாய்ச்சப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்கத் துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.
- மரப்பண்ணை களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது மண்ணை உழுதல் மிகவும் அவசியம்.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
நீர்ப்பாசனம் :
- பருவ மழை பெய்யும் வரை நீர்ப்பாசனம் அவசியம்.
- நீர் வேர் பகுதியில் தேங்காமல் நீர்ப்பாசனம் செய்வது அவசியம்.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் தோராயமாக 3200 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும், விறகிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
- இதன் மரப்பட்டை மருந்து தயாரிக்க பயன்படுகிறது.