நாட்டுவடுமை, அந்தமான் பாதாம்
அறிவியல் பெயர் :
டெர்மினேலியா கடப்பா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய அகன்ற கிளைகளை கொண்ட வேகமாக வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை மென்மையானது மற்றும் சாம்பல் நிறமுடையது.
- பூக்கள் சிறியது மற்றும் வெள்ளை நிறமுடையது. நட்சத்திர வடிவமுடையது.
பரவல் :
வாழிடம் :
கடற்கரை பகுதியை ஒட்டிய காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
களிமண் மற்றும் செம்மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
5.5 – 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
300 - 800 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
3000 மி.மீ வரை வளரக்கூடியது.
வெப்பநிலை :
15 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
கடற்கரை சமவெளி பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- அதிக ஒளி மற்றும் ஓரளவு நிழலை தாங்கி வளரும் தன்மையுடையது.
- மணற்பாங்கான மண்ணில் நன்கு வளரும்.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
- பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
பசுமை மாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள் மூலம் இனப்பெருக்கமடைகிறது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது ஜுன் - ஜுலை மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 176 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 20 – 25 சதவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி திறன் 40 – 45 சதவிகிதமாகும்.
- விதைகள் குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
- விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைப்பது சிறந்ததாகும்.
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.
- நடப்பட்டதிலிருந்து 2 – 3 வருடங்களுக்கு மரப்பண்ணை களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது மண்ணை உழுதல் மிகவும் அவசியம்.
- 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் தோராயமாக 2300 – 2600 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் காய் மருந்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- இதன் இலைகள் டசார் வகை பட்டு உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
- இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், பெட்டிகள் தயாரிக்கவும் மற்றும் படகு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
- தண்டுகளிலிருந்து பரை பெறப்படுகிறது.
- விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயிலிருந்து சோப்பு தயாரிக்க பயன்படுகிறது.
-->