வெப்பாலை
அறிவியல் பெயர் :
ரைட்டியா டிங்டோரியா
பொதுப்பண்பு :
- இது சிறியது முதல் நடுத்தர அளவுடைய இலையுதிர் மரமாகும்.
- பச்சைத் தழும்புகள் அதன பட்டைகளில் காணப்படும்.
- தண்டிலிருந்து வெண்மை நிற ரெசின் வடியும்.
பரவல் :
- ஆஸ்திரேலியா, இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம் பகுதிகளில் காணப்படுகிறது.
வாழிடம் :
வறண்ட, மித வறண்ட மற்றும் ஈரப்பதமிக்க இடங்களிலும் மணற்பாங்கான அல்லது மலைச்சரிவுகளிலும் காணப்படுகிறது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
0 - 1200 மீ
மலையளவு :
400 - 2500 மி.மீ.
வெப்பநிலை :
17 – 25 செல்சியஸ்
நிலப்பரப்பு :
சமவெளி (ம) மலைப்பகுதி
மரப்பண்பு :
- இது மிதமான மற்றும் நிழல் அதிக ஒளியிலும் வளரும் தன்மையுடையது.
- இது ஈரப்பதமிக்க வெப்பமண்டல காலநிலைகளை விரும்பும்.
- இது மிதமான வறட்சியை தாங்குபவை.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மிதமான வளர்ச்சி
உயரம் :
18மீ
இயற்கை மறு உருவாக்கம்:
- விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
செயற்கை மறு உருவாக்கம்:
- விதை மற்றும் தண்டு வெட்டுத் துண்டுகள்.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- விதைகளை நேரடியாக மரத்திலிருந்தோ அல்லது தரையிலிருந்தோ காய்கள் முதிர்வுடன் நவம்பர் - ஜனவரி மாதங்களில் சேகரித்து சாக்குப்பைகளில் சேமிக்கலாம்.
விதை நேர்த்தி:
- விதைகளை 3 மணி நேரம் சுடு நீரிலோ அல்லது குளிர்ந்த நீரில் 6 மணி நோம் ஊர வைத்து விதைக்கலாம்.
நாற்றங்கால் தொழில் நுட்பம்:
- மேட்டுப்பாத்தியில் விதைகளை தூவியோ அல்லது வரிசையாகவோ ஊன்றலாம். பின் அதன் மேல் மண்ணை லேசாகத் தூவி நீர் தெளிக்க வேண்டும்.
- நவம்பர் - டிசம்பர் மாதங்கள் விதைப்பதற்கு ஏற்ற மாதங்களாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நிலத்தை நன்கு உழுது 6X6மீ என்ற இடைவெளியில் 90மீ3 என்ற அளவில் குழி எடுத்து தொழு உரம், சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஸ் கலந்து செடிகளை நட வேண்டும்.
- ஒட்டுகட்டிய செடியாயின் முட்டு பொடுப்பது அவசியமாகும்.
பாதுகாப்பு மற்றும் நோய்:
நாற்றங்காலில் இலைப்புள்ளி நோய் தென்படும்.
முக்கிய பயன்கள் :
மரக்கட்டை:
- தரம்மிக்க மதிப்புடைய சற்று வெள்ளை நிறமுடைய கட்டையானது சிற்பங்கள் செய்யவும், தீக்குச்சி மற்றும் மரப்பெட்டி செய்யவும் பயன்படுகிறது.
மருத்துவப்பயன்:
- இலைகள் பல்வலிக்கு மருந்தாகிறது.
- இதன் பால் இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
- சோரியாசிஸ், வயிற்று வலி, பல்வலி மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுபபடுத்தப்படுகிறது.;
சாயம்:
- இலை, பூ மற்றும் காய்கள் நீல நிற சாயத்தைத் தரவல்லது.
தீவனம்:
- இலைகள் மாட்டுத்தீவனமாகப் பயன்படுகிறது.
-->