தென்னை மரம்
அறிவியல் பெயர் :
கோக்கஸ் நுசிபெரா
பொதுப்பண்பு :
- இம்மரம் நேரான. கடினமான பெரிய மரப்பகுதியை கொண்டது.
- இதன் மட்டையானது பல சிறிய இலைகள் ஒட்டக்காணப்படும்.
- பல மட்டைகள் ஒன்று சேர்ந்து பெரிய குடை போன்ற மேற்பகுதியை கொண்டது.
- காயானது டுரூப் வகையை சேர்ந்தது. காயானது மூன்று பகுதியை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் கடலோர பகுதிகளில் அதிகம் வளரும்.
மண் :
மணல் மற்றும் நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் வளரும் தன்மை கொண்டது.
மண் pH :
4.3 – 8
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
520 - 900 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 1500 மி.மீ
வெப்பநிலை :
20 - 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மிதமான சரிவு நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
- பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமைமாறா காடுகள்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இயற்கையில் இனப்பெருக்கமடையும். ஆனால் அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
- நெற்றுகள் கொண்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- முதிர்ந்த அதிக மகசூலை தரும் மரத்திலிருந்து நெற்றுகள் சேகரிக்கப்பட்டு நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.
- நெற்றுகளை அதிக நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
- நெற்று 30 – 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு முளைக்கும் தன்மை கொண்டது.
- நெற்றினுள் இருக்கும் தேங்காய் பல் மற்றும் தண்ணீர் காய்வதற்கு முன் விதைப்பது சிறந்ததாகும்.
- 1 – 2 வாரங்கள் வரை தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.
நாற்றங்கால் பகுதி :
- நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட பகுதி நாற்றங்காலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
- நாற்றங்காலானது நிழல் இல்லாத பகுதிகளாக இருக்க வேண்டும்.
நெற்று விதைப்பு :
- பெரிய நேரான பாத்தியில் 30 செ.மீ இடைவெளியில் நாற்று விதைக்கப்படுகிறது.
- நேராகவோ அல்லது கிடைமட்டமாகவோ 20 – 25 செ.மீ ஆழத்தில் விதைக்கலாம்.
- 5 வரிசையாக நெற்றுகள் விதைக்கப்படுகிறது. வரிசைக்கு 50 நெற்றுகள் என்ற கணக்கில் விதைக்கப்படுகின்றது.
நாற்றங்கால் பராமரிப்பு முறைகள் :
- தாய்பாத்தியை மூன்று நாட்களுக்கு ஒரு முறை பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
- நாற்றங்கால் களைகளற்றதாக இருக்க வேண்டும்.
- முளைக்கும் இளம் நாற்றுக்கு அவ்வப்போது உரமிட வேண்டும்.
- நாற்றங்காலில் களைகள் வளர்வதால் விகை;கப்பட்டதிலிருந்து 6 மாதத்தில் கைகளினால் களையெடுக்க வேண்டும்.
- நாற்றங்காலுக்கு நிழலமைப்பது மிக அவசியமாகும்.
- நெற்றானது விதைக்கப்பட்டதிலிருந்து 6 – 8 வாரங்களில் முளைக்கத்துவங்குகிறது.
- 5 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- விதைக்க்ப்பட்டதிலிருந்து 5 மாதம் வரை முளைக்காத நெற்றுகள் நாற்றங்காலிலிருந்து நீக்கப்படுகிறது.
- நோய் மற்றும் பூச்சி தாக்குதலின்றி நாற்றங்காலை பராமரிக்க வேண்டும்.
நாற்று தேர்வு :
- 9 – 12 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- விரைவில் முளைத்த நாற்றுகள், நல்ல வளர்ச்சியடைந்த நாற்றுகள் மற்றும் விரைவாக இலைகள் பிரிந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
நாற்றை நடவிற்கு பிடுங்குதல் :
- மண்வெட்டி கொண்டு நாற்றுகள் பிரித்தெடுக்கப்படுகின்றது.
- இலைகளை பிடித்து இழுத்து நாற்றுகளை பிடுங்குதல் கூடாது.
- 6 இலைகள் வளர்ந்த, 10 செ.மீ நாற்றுச்சுற்றளவு கொண்ட நாற்றுகள் நடவு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
மரங்களுக்கிடையேயான இடைவெளி :
- மரங்களுக்கிடையேயான இடைவெளி 7.5 x 7.5 மீ விட்டு நாற்று நடவு செய்வது நல்ல மகசூலை தரும்.
- வரப்பு நடவிற்கு 20 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
நாற்று நடவு :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழியினுள் மேல் மண், மணல் மற்றும் எரு கலந்த கலவை இட்டு நாற்று நடவு மேற்கொள்ளப்படுகிறது.
- நாற்றானது குழியின் நடுவில் இருக்குமாறு வைத்து நடப்படுகிறது.
- நாற்றை சுற்றியுள்ள மண்ணை நன்கு இறுக பிடித்திருக்குமாறு அழுத்த வேண்டும்.
- புதிதாக நடப்பட்ட நாற்றை தென்னை அல்லது பனை இலைகளை கொண்டு நிழல் ஏற்படுத்தப்படுகிறது.
- நாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- மட்டைகளை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதனால் மரத்தின் வளர்ச்சி சற்று அதிகமாகும்.
- பண்ணையானது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- மண் மற்றும் நீர் மேலாண்மை மிக முக்கியமாகும்.
- 12 மாதங்களான தேங்காய் விதைக்காக 30 – 45 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் தோராயமாக 1200 – 1500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
- ஒரு டன் தேங்காய் தோராயமாக 10000 – 15000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் நெற்று தேங்காய் எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.
- இளநீர், ஜாம் மற்றும் தேங்காய் தேன் இம்மரத்திலிருந்து கிடைக்கிறது.
- எண்ணெய் தயாரித்த பின் கிடைக்கும் பிண்ணாக்கு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இதிலிருந்து கிடைக்கும் நார் கயிறு தயாரிக்கவும், தரை விரிப்புகள் தயாரிக்க மற்றும் இதர பயன்களுக்கும் பயன்படுகிறது.
- இதன் மரம் கடினமானது. முன் காலத்தில் வீடு கட்ட இம்மரம் பயன்படுத்தப்பட்டது.
- இம்மரம் மரச்சாமன்கள் தயாரிக்கவும், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.