மட்டிப்பல் மரம்
அறிவியல் பெயர் :
அய்லாந்தஸ் டிரைபைசா
பொதுப்பண்பு :
- இது ஒரு பெரிய அழகிய இலையுதிர் மரமாகும்.
- இம்மரத்தின் அடிப்பகுதி பருத்து தடிமனாக காணப்படும்.
- பூக்கள் அவண்மையானது.
- மரம் பழுப்பு நிறமுடையது.
- காய்கள் சிவப்பு நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
இவை கொதுவாக வெப்பமண்டல பசுமை மாறா காடுகள் காணப்படுகிறது.
மண் :
இவை நீர் தேங்காத தன்மை கொண்ட மற்றும் ஆழமான தன்மையுள்ள களிமண்கூடிய அடைநிலம் மற்றும் இறுகிய அல்லது இலகுவான மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
60 - 1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1500 – 2000 மி.மீ
வெப்பநிலை :
27 – 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.
- நீர் தேங்கியிருக்குமேயானால் மகரந்தசேர்க்கை பாதிக்கப்படுகிறது.
வளரியல்பு :
இது ஒரு பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- இவை விதைகள் மூலம் இனப்பெருக்கமடையக்கூடியது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
- நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் 3 மாதங்கள் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேகரித்து வைக்கலாம்.
- விதை முளைப்புத்திறன் 50 – 70 மற்றும் 40 - 60 சதவிகிதம் ஆகும்.
விதை நேர்த்தி
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- தாய்பாத்தியானது நீர் தேங்காத தன்மை கொண்ட மணல் வகை மண்ணினால் அமைக்கப்பட வேண்டும்.
- தாய்பாத்தியை சற்று மேடான பகுதியில் அமைக்கப்பட வேண்டும்.
- நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் தாய்பாத்தியில் 20 செ.மீ அடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- விதைகள் விரைவில் முளைக்க அதிகப்படியான ஆழத்தில் விதைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். 5.மி.மீ ஆழத்தில் விதைப்பது சிறந்ததாகும்.
- மார்ச் - ஏப்ரல் மாத இடைவெளியில் விதைப்பட வேண்டும்.
- தாய்பாத்தியை பூவாளி கொண்டு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து 10 – 20 நாட்களில் விதைகள் முளைத்துவிடுகின்றன.
- 2 – 3 இலைகள் துளிர்ந்த பிறகு வளர் இடுகொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- ஜுலை – அக்டோபர் மாதகால இடைவெளியில் நடவுபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- தொகுப்பு நடவிற்கு 6 – 10 மாதமான நாற்றுகள் 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளியில் நடப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்பாய்ச்சுதல் மிக அவசியம். நாற்றுகளை கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிமானதாகும்.
பாராமரிப்பு :
- முதலாம் ஆண்டில் மூன்று முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.
- இரண்டாம் ஆண்டில் இரண்டு முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.
நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு :
- இலையுண்ணிகளான அடிவா பேப்ரிசெல்லா மற்றும் எலிக்மா நர்சிசஸ் தாக்குதல் அதிகமாக இளம்பருவத்தில் இருக்கும்.
- எலிக்மா நர்சிஸ் தாக்குதலை கட்டுப்படுத்த 0.05 சதவிகித மோனோகுரோட்டோபாஸ் தெளிக்க வேண்டும்.
- இம்மரம் 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 7000 என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
காய்கறிகள், மிளகு மற்றும் பயறு வகைகளை ஊடுபயிராக பயரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இம்மரம் ஒட்டுப்பலகை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
- மரங்கள் தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு பணன்படுத்தப்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
மர வேலைபாடுகள் செய்ய சுலபமாக இருக்கும்.
பூச்சி தாக்குதலுக்கு சுலபமாக உட்படும்.
கட்டுமரம் தயாரிக்கவும், மரபெட்டிகள் தயாரிக்கவும் பயன்படும்.
பிளைவுட் தயாரிக்கவும் பயன்படுகிறது.
இலைகள் தீவனமாகவும் பயன்படுகிறது.
-->