மஞ்சரளி
அறிவியல் பெயர் :
டெக்கோமா ஸ்டேன்ஸ்
பொதுப்பண்பு :
- 15 – 20 அடி உயரம் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும்.
- இதன் மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
- இதன் நெற்றானது பீன்ஸ் போன்ற வடிவமுடையது. முதிர்ந்த நெற்றானது அடர் சாம்பல் நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
ஆற்றுப்படுகை ஓரங்களில் அதிகம் வளர்கிறது.
மண் :
மணற்பாங்கான களிமண்
மண் pH :
6.5 -7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
600 – 1100 மி.மீ
வெப்பநிலை :
20 - 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஆனால் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகிறது.
- விதைகள் அதிக நாட்கள் முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- விதை முளைப்புத்திறன் 20 – 60 சதிவிகிதமாகும்.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- 2 இலைகள் துளிர்விட்ட பிறகு பைக்கு ஒரு நாற்றுகளை பிடுங்கி மற்றொரு பாலித்தீன் பையில் நடப்படுகிறது.
- 6 மாதமான நாற்று நடவிற்காக பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- அவ்வப்போது பக்க கிளைகளை நீக்குவது அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- அதன் மலர்களுக்காக இம்மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
- அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
- உயிர் வேலியாக இம்மரம் வரப்போரங்களில் வளர்க்கப்படுகிறது.
அழகுசாதனம்:
- இதன் பூக்கள் அழகு சாதனபொருட்களாகப் பயன்படுகிறது.
தடை:
- இம்மரம் உயிரி வேலியாகப் பயன்படுகிறது.
-->