புன்னை
அறிவியல் பெயர் :
கேலோபில்லம் இனோபில்லம்
பொதுப்பண்பு :
- 15 மீ உயரம் வரை வளரக்கூடிய சராசரி அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
- பூக்கள் வெள்ளை நிறமானது.
- காய வைக்கப்பட்ட விதைகள் சாம்பல் கலந்த கருப்பு நிறமுடையது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவின் தென் மாநிலங்களில் அதிகம் வளரும் தன்மையுடையது.
வாழிடம் :
தமிழகத்தின் பசுமை மாறா காடுகளில் பரவலாக காணப்படுகிறது.
மண் :
மணற்காங்கான இடங்களில் நல்ல நீhதேங்காத மண்ணில் வளரும். கடற்கரை பகுதிகளிலும், களிமண் பகுதிகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. சரளை மண்ணிலும் நன்கு வளரும்.
மண் pH :
5.5 - 7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ உயரம் வரை வளரும்
மலையளவு :
700 – 1000 மி.மீ
வெப்பநிலை :
18 - 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமைமாறாக் காடுகள்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள் மூலமும் மறுதாம்பு மூலமும் நன்கு வளரும் தன்மை கொண்டது.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதையானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயானது முற்றி மஞ்சள் நிறமுடையதாக மாறிய பின் சேகரிக்கப்படுகிறது.
- விதையுறையானது நீக்கப்பட்டு பின் நாற்றங்காலில் விதைக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 140 - 180 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 60 - 89 சதவிகிதம் ஆகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்.
- விதைகளை நல்ல காற்றோட்டமுடைய அறையில் பாலத்தீன் பையில் சேகரிக்கப்படுகிறது.
- 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.
- தினமும் நாற்றுகளுக்கு பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- நாற்று நடவிற்கு முன் படிப்படியாக நாற்றங்காலில் இருந்து சாதாரண பகுதிகளுக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 4 x 4 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிலுந்து 2 வருடங்கள் வரை நீர்பாய்ச்சுவது அவசியமாகும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- நடப்பட்டு 3 மாதங்களான நாற்றிற்கு 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு மற்றும் 500 கிராம் எரு ந்த கலவையிட வேண்டும்.
- ஒரு வருடம் வரை நாற்றிற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உரமிட வேண்டும்.
- கரையான் பாதிப்பு அதிகமிருப்பின் 500 மி.லி குளோரோ பைரோபாஸ் என்ற கரையான் கொல்லியை பயன்படுத்தலாம்.
- இரண்டு வுருடங்களான பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க மரங்களை நீக்க வேண்டும்.
சந்தை மதிப்பு :
- இதன் எண்ணெய் லிட்டர் 40 – 50 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.
- இதன் பிண்ணாக்கு கிலோ 20 – 25 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் எண்ணெய்காக இம்மரம் அதிகமாக பயிரிடப்படுகிறது.
- சவுக்கு மரத்திற்கு மாற்றாக இம்மரம் கடற்கரை பகுதிகளில் காற்று தடுப்பானாக பயிரிடப்படுகிறது. மண் அரிமானத்தை தடுக்கவும் இம்மரம் பயரிடப்படுகிறது.
- வேளாண்காடுகளில் இம்மரம் அதிகம் பயரிடப்படுகிறது.
- இம்மர விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உயிர் எரிகொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- எண்ணெய் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
- புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்கு எதிர்ப்பு மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் மரம் தெற்கத்திய நாடுகளில் மரச்சாமான்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
- மரம் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும், சிற்பங்கள் செய்யவும், படகு தயாரிக்கவும் மற்றும் உள் கட்டுமான பணிகளுக்காகவும் பயன்படுகிறது.
டானின்:
- பட்டையில் 11.9% டானின் உள்ளது. சாயம் மற்றும் மீன் வளை செய்ய பயன்படுகிறது.
-->