நாகலிங்க மரம்.
அறிவியல் பெயர் :
கவ்ரேபிட்டா குயினென்சிஸ்
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும். இதன் சராசரி உயரம் 8 – 30 மீ மற்றும் இதன் மரத்தின் சுற்றளவு 30 – 50 செ.மீ ஆகும்.
- இதன் மலர்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது மற்றும் மணம் கமலக்கூடியது.
- மலர்கள் மரத்தின் தண்டுப்பகுதியில் பூக்கவல்லது.
- காய்கள் அகன்றது மற்றும் கடினமான வட்டவடிவமுடையது. காய்கள் குழுமமாக காய்கவல்லது.
- இம்மலரின் மத்தியில் நாகமானது சிவலிங்கத்தை சுற்றியிருப்பது போன்ற தோற்றத்தை கொண்டிருப்பது அதன் சிறப்பம்சமாகும். பூஜைகளுக்காக இதன் மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. மலர்கள் மணம் கமலக்கூடியது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
வாழிடம் :
500 மீ குறைவான கடல்மட்ட உயரம் கொண்ட நீர் ஓடும் பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது. பொதுவாக வறண்ட மண்ணில் நன்கு வளரக்கூடியது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1500 மி.மீ
வெப்பநிலை :
12 - 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன் மணம் கமலக்கூடிய மலர்கள் வாசனை திரியங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் காய் உண்ணப்பயன்படுகிறது.
- இதன் மரம் பொம்மைகள் தயாரிக்க, பெட்டிகள் தயாரிக்க மற்றும் மர உபயோகப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.