பூவங்கொட்டை மரம்
அறிவியல் பெயர் :
சாப்பின்டஸ் எமர்ஜினேட்டஸ்
பொதுப்பண்பு :
- பொரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது சாம்பல் நிறமுடையது.
- அதிக எண்ணிக்கையிலான இருபால் மலர்களையுடையது.
- கனியானது கருமை நிற விதைகளை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
6-6.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 2000 மி.மீ
வெப்பநிலை :
32 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த கனியானது பிப்ரவரி - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- கனியானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
- ஒரு கிலோ விதையில் 2000 - 2500 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 60 – 70 சதிவிகிதமாகும்.
- நாற்று முளைப்புத்திறன் 60 – 62 சதிவிகிதமாகும்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தி விதைப்பு மார்ச் - ஏப்ரல் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்ட விதைகள் ஒரு வாரத்தில் முளைக்கத்துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- தாய்பாத்தியை தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
- 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 2600 – 3000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
ஊடு பயிராக பயிறு வகைப் பயிர்களைப் பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இம்மரத்தின் காயானது சோப்பு விதைகள் என்ற பெயரில் பரவலாக விற்க்கப்படுகிறது.
- காய்கள் பட்டை சுத்தம் செய்ய பயன்படுகிறது.
- இதன் மரம் சிறிய ரக மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது.
கனிகள்:
- இவை அஜீரணம், ஆஸ்துமா, வயிற்றுபோக்கு, வாதம் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
-->