ஜாவா ராணி
அறிவியல் பெயர் :
கேசியா ஜவானிக்கா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய அகன்ற கிளைகளையுடைய மரமாகும்.
- மரப்பட்டையானது மென்மையானது மற்றும் பழுப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
- பூக்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது.
- நெற்றானது உருளையானது மற்றும் அடர் சாம்பல் நிறமுடையது.
பரவல் :
- இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். எனினும் இந்தியா முழுவதும் வளர்க்கப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1220 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 – 1900 மி.மீ
வெப்பநிலை :
35 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி, மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- விதைகள் நெற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட விதைகளின் மேல் சதைப்பகுதி நீக்கப்படுகிறது.
- விதைகள் வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- விதைகளை அதிக நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்சப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- இரண்டு இலைகள் துளிர் விட்ட பின் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
- 6 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளிகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குறிப்பிட்ட இடைவெளியில் களையெடுத்தல் மற்றும் மண் மேம்பாட்டு பணிகள் செய்வது அவசியமாகும்.
- 15 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 3000 – 3200 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இம்மரம் அலங்கார மரமாக தோட்டங்களிலும் மற்றும் சாலையோரங்களிலும் நட்டு வளர்க்கப்படுகிறது.
- இதன் மரப்பட்டை, காய் மற்றும் பூக்கள் டானின் எடுக்க பயன்படுகிறது.