கடுகாய்
அறிவியல் பெயர் :
டெர்மினேலியா செபுலா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய அகன்ற கிளைகளை கொண்ட பெரிய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
- பூக்கள் பச்சை கலந்த வெண்மையானது.
- காய்கள் டுரூப் வகையை சேர்ந்தது. காய்கள் ஆரஞ்சு கலந்த சாம்பல் நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
செம்மண் மற்றும் செம்பொறை மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
6.5 – 7.0
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 - 1500 மி.மீ
வெப்பநிலை :
35 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- அதிக ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
- மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இயற்கை மறு உருவாக்கம் மூலம் இனப்பெருக்கம் மிகவும் குறைவு.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- விதைகள் அனைத்தும் தரமானது.
- வனப்பகுதியில் வளரும் மரங்களை காட்டிலும் திறந்தவெளியில் வளரும் மரங்கள் அதிக காய்களை காய்க்கவல்லது.
- காய்கள் நிலத்தில் விழுந்தபிறகு சேகரிக்கப்படுகிறது.
- நிழலில் காய வைக்கப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. 12 மாதம் வரை முளைப்புத்திறன் குறையாமல் இவ்விதைகளை சேகரித்து வைக்கலாம்.
- ஒரு கிலோ விதையில் 140 – 790 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 50 – 60 சதவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி திறன் 40 – 50 சதவிகிதமாகும்.
- விதைப்பகுதியை சேதம் செய்யாத வண்ணம் மேற்தோல் நீக்கப்பட வேண்டும்.
- மேற்தோல் நீக்கப்பட்ட விதைகள் குளிர் நீரில் 36 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
- விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைகள் மணலை கொண்டு மூடப்படுகிறது.
- விதைக்கப்பட்டபின் பூவாளி கொண்டு தினமும் நீர் பாய்ச்சப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 15 நாட்களில் விதைகள் முளைக்கத் துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்று தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 6 x 6 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.
- குழியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணுடன் 15 கிராம் எரு மற்றும் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து ஆகியவை 75:30:30 கிராம் சேர்த்து நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- 1 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- 6 x 6 மீ இடைவெளியில் நாற்று நடும்பொழுது ஒரு ஹெக்டருக்கு 280 – 300 நாற்றுகள் தேவைப்படும்.
- 4 வருடமான மரங்களின் பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் மண் உழுதல் மிக அவசியமாகும்.
- 8 - 10 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
மஞ்சள் (ம) குறுகிய காலப் பயிர்களை ஊடுபயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இதன் காய் மருந்திற்காக அதிகம பயன்படுத்தப்படுகிறது.
இதன் கனிகள் டானின் நிறைந்ததால் இந்தியாவில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
கனிகள் காலிகோ சாயம் மற்றும் அச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது.
-->