காயா மரம்
அறிவியல் பெயர் :
காயா செனிகாலென்சிஸ்
பொதுப்பண்பு :
- 15 - 30 மீ உயரம் வரை வளரக்கூடிய பெரிய பசுமை மாறா மரமாகும்.
- மரமானது அடர் சாம்பல் நிறமுடையது.
- இலையானது வெளிர் பச்சை நிறமுடையது.
- விதையானது மேல்நோக்கியிருக்கும் மற்றும் வட்டமானது. விதைகள் சாம்பல் நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
ஆற்றுபடுகையை ஒட்ட காடுகளில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1800மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
400 – 1750 மி.மீ
வெப்பநிலை :
24 - 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
வளரியல்பு :
பகுதி இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- வேர் கிழங்குகள் மூலம் இனப்பெருக்கமடைகிறது.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதையானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் 1 – 2 நாட்களுக்கு உலர்த்தப்படப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் காற்றுபுகாவண்ணம் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 1500 - 2000 விதைகள் இருக்கும்.
- விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் ஒரு வருடம் வரை சேமித்து வைக்கலாம்.
- குளிர் நீரில் 24 - 48 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
- வளர் இடுபொருட்கள் அடங்கிய 10 x 1 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் விதையானது நேரடியாக விதைக்கப்படுகிறது.
- இம்முறையான விதைப்பு பிப்ரவரி – மார்ச் கால இடைவெளியில் செய்வது நாற்று உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும்.
- 6 மாதமான நாற்றானது நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
-
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்ட முதல் மாதத்திற்கு பின் களைகள் எடுப்பது அவசியமாகும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்வது நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 1800 – 2000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் கட்டிட கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும், விலையுயர்ந்த மரச்சாமான்கள் தயாரிக்கவும், கைபிடிகள் தயாரிக்கவும், கதவு, ஜன்னல் தயாரிக்வும் மற்றும் சிற்பங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
- விறகிற்காகவும் மற்றும் கரி உற்பத்திக்காகவும் இம்மரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
- பழங்காலத்திலிருந்தே இதன் பட்டை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.