வாகை
அறிவியல் பெயர் :
அல்பைசியா லெபக்
பொதுப்பண்பு :
- நீண்ட சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
- இதன் மரம் அடர் சாம்பல் நிறமுடையது.
- பூக்களானது வெண்மையானது.
- நெற்றானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
- ஒரு நெற்றில் 6 – 12 விதைகள் காணப்படும்.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறது.
- இவை குறைந்தளவு கடல்மட்ட உயரம் கொண்ட பகுதிகளிலும் நன்கு வளரும்.
- தமிழ்நாட்டில் இம்மரம் வனப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல பசுமை மாறா காடுகளிலும், வறண்ட இலையுதிர் காடுகளிலும் இவை அதிகமாக வளரும் மரமாகும்.
மண் :
நீர்தேங்காத தன்மை கொண்ட உவர்நிலங்கள், களிமண், செம்பொறை மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
630 – 2600 மி.மீ
வெப்பநிலை :
25 – 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.
- அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- சாதகமான சூழல் இருந்தால் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- நெற்றானது ஜனவரி – மார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் 12 மாதங்கள் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேகரித்து வைக்கலாம்.
- ஒரு கிலோ விதையில் தேராயமாக 5000 - 12000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 65 - 90 சதவிகிதம் ஆகும்.
விதை நேர்த்தி
- கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரமும், குளிர் நீரில் 48 மணி நேரமும் ஊர வைக்க வேண்டும்.
- இவ்வாறு நேர்த்தி செய்வது விதை முளைப்பு விகிதத்தை அதிகரிக்கும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- விதையானது நேரடியாக 10 x 1 மீ அளவுள்ள தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
- பொதுவாக மார்ச் மாதம் தாய்பாத்தி விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்ட 5 நாளிலிருந்து விதைகள் விதைக்கப்படுகிறது. 15 நாள் முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது
- கைகளினால் மண்ணில் விதைகள் விதைக்கப்படுவது சிறந்த முறையாகும்.
- 6 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- மரப்பண்ணை களைகலற்றதாகவும், நீர் தேங்காதவாறும் இருக்க வேண்டும்.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 3700 - 4000 என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
தேயிலை, காபி இலை, ஏலக்காய் ஆகியனவும் ஊடுபயிராகப் பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
-->