முள்ளு முருங்கை
அறிவியல் பெயர் :
எரித்திரினா இண்டிகா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும். அதிக எண்ணிக்கையிலான கிளைகளையுடையது.
- மரப்பட்டையானது மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் வெளிர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் அடர் சிவப்பு நிறமுடையது.
- இதன் அடர் கருப்பு நெற்றானது 6 – 12 அடர் சிவப்பு அல்லது சாம்பல் நிற விதைகளை கொண்டிருக்கும்.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
750 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1500 மி.மீ
வெப்பநிலை :
32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- பனியை தாங்கி வளராது.
- இதன் மறுதாம்பு நன்கு வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- நேரடி உற்பத்தி மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த விதையானது பிப்ரவரி – ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் காய வைக்கப்பட்டு பின் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- விதை முளைப்புத்திறன் 80 – 90 சதவிகிதமாகும்.
- விதைகள் 12 மாதங்கள் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் மார்ச் - ஏப்ரல் கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- விதைகள் ஒரு வாரத்தில் முளைக்க துவங்கி ஒரு வருடத்தில் முற்றிலும் முளைத்து விடுகிறது.
- 30 செ.மீ உயரமுள்ள 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 30 செ.மீ உயரமுள்ள 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- வளர்நத பின் மரங்களுக்கிடையேயான இடைவெளி 10 x 10 மீ என இருக்குமாறு மரங்களை நீக்க வேண்டும்.
- இவ்வாறு நடும்பொழுது 70 - 80 சதவிகித வெற்றியை தரக்கூடியது.
- அவ்வப்போது களைகள் நீக்குதல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
- 15 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- இம்மரம் தோராயமாக 2800 – 3000 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- கடலோர பகுதிகளில் படகிற்கு துடுப்பாகவும், கட்டுமரம் தயாரிக்க மற்றும் இதர மீன்பிடி பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
- உயிர் வேலியாக இம்மரம் பயரிடப்படுகிறது.
- கடலோர பகுதிகளில் காற்று தடுப்பானாக இம்மரம் பயரிடப்படுகிறது.
- நிழல் தரும் மரமாக இம்மரம் பயன்படுகிறது.