அகத்தி மரம்
அறிவியல் பெயர் :
செஸ்பேனியா கிராண்டிபுளோரா
பொதுப்பண்பு :
- அகத்தி மரம் குறுகிய காலம் மட்டுமே வாழக்கூடிய வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
- மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
- இலைகள் இளமையில் அடர் பச்சை நிறமுடையது, முதிர்ந்தபின் மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது.
- பூக்கள் வெண்மை கலந்த இளஞ்சிவப்பு நிறமுடையது.
- நெற்றானது நீளமானது மற்றும் 10 – 15 விதைகயையுடையது.
பரவல் :
- இம்மரம் இந்திய பகுதிகளை தாயகமாக கொண்டது.
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
6.5 - 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
800 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 மி.மீ
வெப்பநிலை :
40 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
வெப்பமண்டல சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
- இம்மரம் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 15000 - 16000 விதைகளிருக்கும்.
- விதைகள் ஒரு வருடம் வரை முளைப்புத்தன்மையை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- விதை முளைப்புத்திறன் 80 – 90 சதிவிகிதமாகும்.
- பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் விதைக்கப்பட வேண்டும்.
- பாலித்தீன் பையானது மணல் மற்றும் எரு அடங்கிய வளர் இடுபொருட்கள் நிறப்பப்படுகிறது.
- 3 - 5 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- விதை முளைத்தபின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சப்படுகிறது.
- 3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு:
- 1.8 மீ இடைவெளியில் 30 செ.மீ ஆழத்தில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 1.8 x 1.8 x 1.8 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
நாற்றங்கால் உற்பத்தி நாற்றுகள் :
- 3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 1.2 x 1.2 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- குழிகள் மழை பொழிவுக்கு முன்னதாக எடுக்க்ப்பட வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் மண் உழுதல் அவசியமாகும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து 8 மாதங்களில் முதல் அறுவடை செய்யப்படுகிறது. அதன் பின் 60 – 80 நாட்களுக்கு ஒரு முறை இதன் இலைகள் கீரைக்காக அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 2300 – 2600 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
- வெண்ணிலா, மிளகு போன்றவை வளர ஊடு பயிராகவும் பயன்படுகிறது.
- வெற்றிலை மற்றும் தீவனப் பயிர்களை ஊடு பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இதன் இலைகள் கீரை, கால்நடை தீவனம் மற்றும் பசுந்தழை உரமாக பயன்படுகிறது.
- பயனற்ற நிலங்களை வளமாக்க இம்மரம் வளர்க்கப்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
- இம்மரம் தரம் குறைந்த காகிதம் மற்றும் மரக்கூல் தயாரிக்க பயன்படுகிறது.
- அலங்கார மரமாக இம்மரம் வளர்க்கப்படுகிறது.
- மரப்பட்டை கசிவு விதையில் இருந்து கோந்து போன்றவை பெறப்படுகிறது. கம் ஆராபிக்கிற்கு மாற்றாக இந்த பசை பயன்படுகிறது.
- மரப்பட்டையிலிருந்து டானின் பெறப்படுகிறது.
- வெண்மை நிற மரக்கட்டை இலேசாகவும், மென்மையாகவும் உள்ளது. மரக்கட்டையின் அடர்த்தி வயது அதிகரிக்கும போது அதிகரிக்கும்.
- இக்கட்டை வீட்டுக் கட்டுமானப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
-->