பேரிக்காய்
அறிவியல் பெயர் :
பைரஸ் பம்யூனிஸ்
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய சிறிய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
- மலர்கள் எதிரெதிரே அமைந்திருக்கும். பளபளக்கும் பச்சை நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
நல்ல நீர் தேங்காத அதிக வளம் கொண்ட செம்பொறை மண்ணில் நன்கு வளரும்.
மண் :
மணற்பாங்கான களிமண்
மண் pH :
6.0 – 6.8
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
600 - 2400 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1200 மி.மீ வரை மழையளவுள்ள பகுதிகளில் வளரும்.
வெப்பநிலை :
20 – 39 செல்சியஸ்
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இயற்கை முறை இனப்பெருக்கம் போதுமானதாக இருப்பதில்லை.
- விதைகள் காயிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- சிறிது சிறிதாக விதைகளை பிரித்தெடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு காயும் 10 கரு நிற விதைகளை கொண்டது.
- ஒரு கிலோ விதையில் 22000 விதைகளிருக்கும்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
- தாய்பாத்தி தினமும் பூவாளி கொண்டு நீர் தெளிக்கப்படுகிறது.
- 2 இலைகள் துளிர்நத பின் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 25 அடி இடைவெளியில் மரங்கள் பொதுவாக நடப்படுகிறது.
- இவ்விடைவெளியில் நடப்பட்டால் ஒரு ஹெக்டருக்கு 70 மரங்கள் நட முடியும்.
- இம்முறையில் நூற்றுக்கனக்கான மரங்கள் நடப்படுகிறது.
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு:
பூச்சி மற்றும் நோய்கள்:
- ஆழமாக நடும் நுனி அழுகல் நோய் வரும்.
- இளங்கன்றுகள் சாம்பல் நோய், மற்றும் வேர் அழுகல் நோயிற்கு பாதிக்கப்படும்.
- பூக்கும் காலத்தில் தீ கருகல் நோயால் பாதிக்கப்படும்.
கவாத்து செய்தல் :
- காய்க்கும் மரங்களுக்கும் பழங்கள் அறுவடை செய்த பின் ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவாத்து செய்தல் மிகவும் அவசியம்.
- ஒரு வருடம் ஆன மரத்தினை 1 – 1.2 மீட்டர் உயரமும் அனைத்து கிளைகளையும் வெட்டி கவாத்து செய்யலாம்.
கலைதல்:
- ஒரு கொத்தில் ஒரு பழத்தினை விட்டு இருமுறை கலைத்தல் வேண்டும். அறுவடைக்கு 30 நாட்கள் முன் கலைக்கும் போது நல்ல அளவுடைய பழத்தினை பெறலாம்.
- 200 – 400 பழங்கள் ஒரு மரத்திற்கு விட வேண்டும்.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 12000 – 15000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் கனிகள் உணவாக பயன்படுகிறது. பழுக்கூழ் தயாரிக்க மற்றும் ஜாம் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் மரம் சாம்பல் கலந்த சிவப்பு நிறமுடையது. மரச்சாமான்கள் தயாரிக்கவும் இதன் மரம் பயன்படுகிறது.
ஜரோப்பா மதுபானம் ‘பேரி’ பேரியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
-->