பாரா ரப்பர் மரம்
அறிவியல் பெயர் :
ஹீவியா பிரேசிலியன்சிஸ்
பொதுப்பண்பு :
- வேகமாக வளரக்கூடிய பெரிய கூம்பு வடிவ மேற்பகுதியையுடைய மரமாகும்.
- இதன் மரப்பட்டை சாம்பல் நிறமுடையது மற்றும் அதிகப்படியான வேட்டக்ஸை கொண்டது.
- அடுத்தடுத்த இலைகளை கொண்டது மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் சிறியது மற்றும் பச்சை கலந்த வெண்மையானது.
- காயானது மூன்று அறைகளையுடையது மற்றும் மூன்று விதைகளை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
வெப்ப மண்டல பசுமை மாறா காடுகளில் வளரும் தன்மை கொண்டது.
மண் :
செம்மண், செம்மண் கலந்த வண்டல் மண் மற்றும் செம்பொறை மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.
மண் pH :
4-8
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
300 - 500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1500 – 3000 மி.மீ
வெப்பநிலை :
23 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
- சூரை காற்றை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- ஒட்டு முறை, கட்டுசெடி வளர்ப்பு மற்றும் மற்ற உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- பழுத்த காயானது வெயிலில் காய வைக்கப்படுகிறது பின் பிரித்தெடுக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 10000 விதைகளிருக்கும்.
- விதைகள் விரைவில் முளைப்புத்திறனை இழந்து விடும் தன்மையுடையது.
தாய்பாத்தி அளவு :
- 60 – 120 செ.மீ அகலமுடைய தாய்பாத்தியானது வண்டல் மண் மற்றும் எரு கொண்டு தயார் செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
- விதைக்கப்பட்ட பின் ஆற்று மணலை கொண்டு 5 செ.மீ வரை நாற்று மூடப்படுகிறது.
- 5 – 7 நாட்களில் விதைகள் முளைக்க துவங்கிவிடுகிறது.
கன்றுகளுக்கிடையேயான இடைவெளி :
- விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றிற்கு 23 x 23 செ.மீ, 30 x 30 செ.மீ மற்றும் 34 x 20 செ.மீ இடைவெளி அவசியம்.
- பக்க மொட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றிற்கு 30 x 30 செ.மீ இடைவெளி அவசியம்.
- குச்சிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றிற்கு 60 x 60 செ.மீ இடைவெளி அவசியம்.
- இளம் பக்க குச்சிகள் உற்பத்தி செய்யப்பட்ட கன்றிற்கு 30 x 30 செ.மீ இடைவெளி அவசியம்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- நாற்று தன்மை இடைவெளி (மீ) ஒரு ஹெக்டருக்கு தேவையான நாற்று
ஒட்டு நாற்றுகள்
மலைப்பகுதிக்கு 6.7 x 3.4 - 445
சமவெளி பகுதிக்கு 4.9 x 4.9 - 420
விதை நாற்றுகள்
மலைப்பகுதிக்கு 6.1 x 3.0 - 539
சமவெளி பகுதிக்கு 4.6 x 4.6 - 479
- ஊடு பயிரை விதைப்பதனால் களைகள் வளரும். எனவே களைகளை அடிக்கடி நீக்க வேண்டும்.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 2800 – 3000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இம்மரம் இதன் லேட்டக்சிற்காக வளர்க்கப்படுகிறது.
- ரப்பர் மரம் தீக்குச்சி தயாரிக்கவும் மற்றும் விறகிற்காகவும் பயிரிடப்படுகிறது.
- மரச்சாமான்கள் தயாரிக்கவும், விலையுயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
- உணவு, தீவனம், எரிபொருள், மரம், மரக்கட்டை கழிவு காளான் வளர்ப்புக்கு பயன்படுகிறது.
-->