நெல்லி மரம்
அறிவியல் பெயர் :
பில்லாந்தஸ் எம்பிலிக்கா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது பழுப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் வெளிர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது.
- காயானது வட்ட வடிவமுடையது. 6 செங்குத்தான கோடுகளையுடைய வெளிர் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது.
- இம்மரம் சமய முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும்.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
8
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1800 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1500 – 2500 மி.மீ
வெப்பநிலை :
20 - 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- உடல இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்று மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயின் சதைப்பகுதியானது நீக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 3300 - 5000 விதைகளிருக்கும்.
- விதைகள் குறைந்தளவு விதை முளைப்புத்திறனையே கொண்டுள்ளது.
- கொதிக்கவைக்கப்பட்ட நீரில் 5 நிமிடம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்ட பின் தாய்பாத்தி மீது மணல் கொண்டு மூடப்படுகிறது.
- குறிப்பிட்டளவு நீரை பூவாளி கொண்டு அவ்வப்போது தெளிக்க வேண்டும்.
- 2 இலைகள் துளிர்ந்த பின் நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நடவானது ஜுலை – ஆகஸ்ட் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 மற்றும் 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
- இளம் பருவத்தில் நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
- மழை மற்றும் பனி காலத்தில் நீர் பாய்ச்ச தேவையில்லை.
- சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதன் மூலம் 40 – 45 சதவிகித நீரை சேமிக்கலாம்.
- 10 - 12 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு கிலோ நெல்லிக்காய் 100 – 120 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் காய் வயிற்றுப்புண்ணை குணப்படுத்த, ஒட்டுக்குடல், லுக்கேரியா மற்றும் சர்க்கரை நோயை குணப்படுத்த பயன்படுகிறது.