செண்பகம்
அறிவியல் பெயர் :
மைகிலியா சம்பகா
பொதுப்பண்பு :
பரவல் :
வாழிடம் :
வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது.
மண் :
ஈரமான, ஆழமான, வளமான மண்ணில் நன்கு வளருகின்றன.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
200 – 2400மீ
மலையளவு :
500 – 1500மி.மீ
வெப்பநிலை :
7-38 செல்சியஸ்
நிலப்பரப்பு :
மலைப்பகுதி மற்றும் புல்வெளி போன்ற இடங்களில் வளருகின்றன.
மரப்பண்பு :
வளரியல்பு :
பசுமைமாறா மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- இம்முறையில் குறைந்தளவு வெற்றியே கிடைக்கிறது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- விதையானது ஆகஸ்ட் - செப்டம்பர் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 10000 - 29500 விதைகள் இருக்கும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்
- அறை வெப்பநிலையில் 7 மாதங்கள் வரை விதைகளை சேகரிக்கலாம்.
விதை நேர்த்தி:
நாற்றாங்கால் தொழில் நுட்பம்:
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- 15 – 20 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
- இது ஒரு அலங்கார தாவரம் என்பதால் குறிப்பிட்ட வடிவமுமையதாக மாற்ற கிளைகளை அகற்றுவது முக்கியமாகும்.
முக்கிய பயன்கள் :
- பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை – திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இதன் மரம் மிகச்சிறந்த எரிபொருளாகும். ஒரு கிலோ மரத்தில் 2070 கிலோ கலோரி வெப்பத்தை தரவல்லது.
- சுமய முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும். எனவே கோவில் காடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
- இலைகள் பட்டுபூச்சி வளர்ப்புக்கு பயன்படுகிறது.
- அலங்கார மரமாக – சாலையோரங்களிலும் கோயில்களிலும் வளர்ப்படுகிறது.