சில வாகை மரம்.
அறிவியல் பெயர் :
போஸ்வாலியா செரேட்டா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய குறுகிய கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
- பூக்கள் சிறியது மற்றும் வெண்மையானது.
- காய்கள் முக்கோன வடிவமுடையது மற்றும் டுரூப் வகையை சேர்ந்தது. விதைகள் இறகு போன்ற வடிவமுடையது.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5-6.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1150 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 2000 மி.மீ
வெப்பநிலை :
47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
- மறுதாம்பு மறை மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த விதையானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிராம் விதையில் 14 - 15 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 40 – 48 சதிவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி திறன் 19 சதவிகிதமாகும்.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் மட்டுமே விதைப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- நாற்றுகள் பாலித்தீன் பைகளில் நேரடியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
- ஒவ்வொரு பாலித்தீன் பைக்கும் 2 – 3 விதைகள் என விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 6 நாட்களில் விதைகள் விதைக்கப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் அவ்வப்போது மண்ணை உழுதல் அவசியமாகும்.
- 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
- பயறு வகைப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் மர பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. குறிப்பாக பொட்டிகள், மேஜை மற்றும் நாற்காலி தயாரிக்க, படகு தயாரிக்க தேவையான பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.