தூங்கு மூஞ்சி மரம்
அறிவியல் பெயர் :
சாமானியா சாமன்
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும்.
- மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
- பூக்கள் சிறியது மற்றும் இளஞ்சிவப்பு நிறமுடையது.
- நெற்றானது கருஞ்சாம்பல் நிறமுடையது மற்றும் 20 – 25 சாம்பல் நிற விதைகளை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
4 - 6
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1300 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 2500 மி.மீ
வெப்பநிலை :
20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 4400 - 7700 விதைகளிருக்கும்.
- விதை விதைக்கப்பட்டதிலிருந்து 33 – 48 நாட்களில் முளைக்கும் தன்மை கொண்டது.
- விதை முளைப்புத்திறன் 50 – 60 சதிவிகிதமாகும்.
- கொதிக்கவைக்கப்பட்ட மற்றும் குளிர் நீரில் நேர்த்தி செய்யப்படுகிறது.
- நாற்றுகள் காயமாகாதவண்ணம் உற்பத்தி செய்ய வேண்டும். வேர்கள் அறுந்துவிடாமல் இருக்க வேண்டும்.
- நேரடி விதைப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- பண்ணையானது முழுமையாக உழப்படுகிறது.
- விதைகளானது 2 மீ இடைவெளியில் 3 மீ வரிசை இடைவெளியிலும் விதைக்கப்படுகிறது.
- Plantation should be weed free initially for 2 years.
- 70 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 3700 – 4000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
- விறகிற்காக இம்மரம் அதிகம் வளர்க்கப்படுகிறது.
- இம்மரம் ஈரப்பதத்தை தாங்கி வளரக்கூடியது, மேலும் இம்மரம் கட்டுமான பணிகளுக்கு பயன்படுகிறது.