பரம்பை மரம்
அறிவியல் பெயர் :
அகேசியா பெருஜினியா
பொதுப்பண்பு :
- குறைந்த உயரம் மட்டுமே வளரக்கூடிய இலையுதிர் மரம்.
- பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
- விதையானது தட்டையான வட்ட வடிவமுடையது. விதை சாம்பல் நிறமாவோ அல்லது பச்சை நிறமாகவோ காணப்படும்.
பரவல் :
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் அதிகம் வளர்கின்றது.
வாழிடம் :
இம்மரம் வறண்ட இலையுதிர் காடுகளிலும் மற்றும் முட்புதர் காடுகளிலும் அதிகம் வளர்கின்றது.
மண் :
கரிசல் மண்
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
150 - 1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
350 –750மி.மீ
வெப்பநிலை :
22 - 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மெதுவான வளரக்கூடியது.
உயரம் :
10 – 15 மீ உயரம் வரை வளரக்கூடியது.
இயற்கை மறு உருவாக்கம்:
- விதைகள் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் போதிய வெற்றியை அளிப்பதில்லை. எனினும் இம்முறையிலும் இயற்கையில் இனப்பெருக்கம் அடைகிறது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
விதை நேர்த்தி
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
நாற்றங்கால் தொழில் நுட்பம்:
- 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் இடபொருட்களான 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய கரவை நிறப்பப்படுகிறது.
- 1.5 செ.மீ ஆழத்தில் பைக்கு 2 விதைகள் என விதைக்கப்பட வேண்டும்.
- நாற்று பைகளுக்கு அவ்வப்போது நீர் பாய்ச்ச வேண்டும்.
- 6 மாதமான நாற்றுகள் நடவு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 x 3 மீ அல்லது 3 x 4 மீ குழிகள் பொதுவாக நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிறகு முன்பே எடுக்கப்படுகிறது.
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பராமரிப்பு:
களையெடுத்தல்:
- நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு மரங்களை சுற்றிய புதர்களை நீக்க வேண்டும்.
- முதல் வருடம் - 3 முறை
- இரண்டாம் வருடம் - 2 முறை
- மூன்றாம் வருடம் - 1 முறை
களைத்தல்:
- முதல் களைத்தல் 5 வருடத்திற்கு பிறகு செய்ய வேண்டும்.
- 10,15,20 மற்றும் 25 வருடங்களில் களைத்தல் வேண்டும்.
நோய்:
- வேர் அழுகல் - கேனோடெர்மா
- கருஞ்சேகு அழுகல் - போமஸ் பேடியஸ்
மேலாண்மை:
- முதல் மூன்று வருடத்திற்கு மரத்தின் இடைவெளியில் வளர்க்கப்படும் பயிர்கள் (வேர்கடலை, சோளம்)
சந்தை மதிப்பு :
முக்கிய பயன்கள் :
மரக்கட்டை:
- இது வேளாண் உபகரணங்கள், கருவிகளின் கைப்பிடிகள் தயாரிக்க பயன்படுகிறது.
- அலங்கார மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
-->