சிவப்பு கொண்ணை மரம்
அறிவியல் பெயர் :
கேசியா மார்ஜினேட்டா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
- அகன்ற கிளைகளை கொண்ட மென்மையான சாம்பல் நிறமுடைய பட்டைய கொண்ட மரமாகும்.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
- அதிக எண்ணிக்கையிலான மலர்களை கொண்டது.
- அதிக எண்ணிக்கையிலான மலர்களை கொண்டது. மலர்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது.
- நெற்றுகள் நீண்டது மற்றும் காய்ந்தபின் சாம்பல் நிறமுடையது.
பரவல் :
- இம்மரம் கிழக்கு இந்திய பகுதிகளில் அதிகம் வளரும் தன்மையுடையது. இம்மரம் தீபகற்ப இந்திய பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.
வாழிடம் :
குறைந்தளவு கடல்மட்ட உயரம் கொண்ட காடுகளில் அதிகம் வளர்கின்றது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
400 – 2800 மி.மீ
வெப்பநிலை :
38 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சி தாங்கி வளரக்கூடியது.
- தீயை தாங்கி வளரும் தன்மையற்றது.
- நீர் பற்றாக்குறையான பகுதிகளில் தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் நெற்றிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- விதைகள் 3 வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துகொள்ளும் தன்மையுடையது.
- ஒரு கிலோ விதையில் 3700 விதைகளை கொண்டது.
- விதை முளைப்புத்திறன் 75 – 80 சதிவிகிதமாகும்.
- கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.
- குளிர் நீரில் 24 மணிநேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யலாம்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. விதைகள் விதைப்பு ஏப்ரல் - மே மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 3 – 4 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- தாய்பாத்தியை களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
- நாற்றுகள் இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- விதைகளை நேரடியாக வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பையிலும் விதைக்கலாம்.
- நாற்றுகளுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறை பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- உப்பு தன்மையுள்ள நிலங்கள் மற்றும் களிமண்ணில் 60 x 60 x 80 செ.மீ அல்லது 60 x 60 x 120 செ.மீ அளவுள்ள குழி பயன்படுத்தப்படுகிறது.
- விறகிற்காக வளர்க்கப்படும் பண்ணைக்கு மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 2 x 2 மீ என இருக்க வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் உழுதல் அவசியமாகும்.
- கால்நடைகள் நாற்றுகளை சேதப்படுத்தாத வண்ணம் வேலி அமைத்தல் வேண்டும்.
- 7 - 10 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
- இம்மரம் நிழலுக்காக சாலையோரங்கள், கொக்கோ மற்றும் காப்பி தோட்டங்களில் நடப்படுகிறது.
- காற்றுதடுப்பான் மற்றும் வரப்போரங்களில் பாதுகாப்பிற்காக இம்மரம் நட பயன்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இம்மரம் நிழலுக்காக சாலையோரங்கள், கொக்கோ மற்றும் காப்பி தோட்டங்களில் நடப்படுகிறது.
- காற்றுதடுப்பான் மற்றும் வரப்போரங்களில் பாதுகாப்பிற்காக இம்மரம் நட பயன்படுகிறது.
- மண் அரிமானத்தை தடுக்க இம்மரம் விளைநிலங்களின் வரப்போரங்களில் நடப்படுகிறது.
- இதன் இலைகள் பசுந்தாழ் உரமாக வளர்க்கப்படுகிறது. இம்மரம் வருடத்திற்கு 500 கிலோ இலைகளை தரவல்லது.
- ஊடுபயிர் வளர்ப்பிற்கு இம்மரம் ஏற்றதாகும்.
- வறண்ட பகுதிகளிலும் இம்மரம் வளரக்கூடியது. எனவே வறண்ட பகுதிகளில் நடுவதற்கு இம்மரம் பயன்படுத்தப்படுகிறது.
- இம்மரம் சாலையோரங்கள் மற்றும் பூங்காக்களில் பயிரிட பயன்படுத்தப்படுகிறது.