வெள்ளை மருது
அறிவியல் பெயர் :
டெர்மினேலியா அர்ஜுனா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய கீழ்நோக்கி வளைந்த கிளைகளை கொண்ட வேகமாக வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை கடினமானது மற்றும் சாம்பல் அல்லது இளஞ்சிவப்பு கலந்த பச்சை நிறமுடையது.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் இதய வடிவமுடையது.
- பூக்கள் கொத்தாக அமைந்திருக்கும். பூக்களின் மீது ரோமம் வளர்ந்திருக்கும்.
- காய்கள் நார் நிறைந்த டுரூப் வகையை சேர்ந்தது.
- இதன் காய் முதிர்ந்தபின் அடர் சாம்பல் நிறமுடையது. காய்கள் விசிறி போன்று முகப்புகளை கொண்டிருக்கும்.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவக்காணப்படுகிறது.
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
ஈரமான, நீர் தேங்காத வண்டல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
8.5 முதல் 10.5 வரை
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 - 1900 மி.மீ
வெப்பநிலை :
20 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் நீர் ஓடும் நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரும் மரமாகும்.
- பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள் மற்றும் மறுதாம்பு மூலம் இனப்பெருக்கமடைகிறது.
- இம்மரம் நீர் நிலை பகுதிகளில் பரவலாக வளரும்.
- நாற்றங்கால் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- இம்மரம் வருட வருடம் அளவுக்கததிகமாக காய்க்கவல்லது.
- பழுத்த காயானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிராம் விதையில் 14 – 15 விதைகளிருக்கும்.
- இதன் விதைகள் சாதாரணமாக 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்கவைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 1 நிமிடம் ஊர வைக்கப்பட்டு பின் குளிர் நீரில் 48 மணி நேரம் ஊரவைக்கப்படுகிறது.
- விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைப்பது சிறந்ததாகும்.
- விதைக்கப்பட்டபின் பூவாளி கொண்டு தினமும் நீர் பாய்ச்சப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்கத் துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.
- மரப்பண்ணை களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது மண்ணை உழுதல் மிகவும் அவசியம்.
- 16 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் தோராயமாக 3200 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் சாம்பல் நிறமுடைய மரம் உறுதியானது. எனவே இம்மரம் கட்டிட கட்டுமான பணிகளுக்கும், வேளாண் உபகரணங்களும், மின் கம்பங்கள் அமைக்கவும் மற்றும் ஒட்டுப்பலகைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
- இதன் இலைகள் டசார் வகை பட்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
- அலங்கார மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
-->