முராங் மூங்கில்
அறிவியல் பெயர் :
பேம்பூசா நுடன்ஸ்
பொதுப்பண்பு :
- இது இலையுதிர் அல்லது இலையுதிரா தாவரமாகும்.
- இது தடித்த சுவர்களையுடைய 6-15மீ உயரமும் 5-10செ.மீ விட்டமும் உடைய கழிகளைக் கொண்டிருக்கும்.
- இது இந்தியாவின் காகித உற்பத்தியில் 6வது முக்கிய பங்கு வகிக்கிறது.
பரவல் :
- இது ஹிமாச்சலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்து வளரும்.
- மேலும் தென்னிந்தியாவின் சில இடங்களில் காணப்படுகிறது.
வாழிடம் :
மலைச்சரிவுகள், சமவெளிகளில் வளருகிறது.
மண் :
வடிகால் வசதியுடைய மணற்பாங்கான மண் வகையில் வளரும்.
மண் pH :
4.5-7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
600-1500 மீட்டர்
மலையளவு :
1000-5000மி.மீ
வெப்பநிலை :
13-39 செல்சியஸ்
நிலப்பரப்பு :
ஈரப்பர நிலங்களை விரும்பும்
மரப்பண்பு :
- அதிக ஒளி விரும்பி, கடினத்தன்மையுடன் வறட்சியைத் தாங்கி வளரும்.
வளரியல்பு :
இலையுதிர் அல்லது இலையுதிரா தாவரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக வளரக்கூடியது.
உயரம் :
12 மீட்டர்
இயற்கை மறு உருவாக்கம்:
செயற்கை மறு உருவாக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- 35-45வது ஆண்டில் தொடர்ந்து 2-3 ஆண்டுகள் பூக்கும்.
- பூக்க ஆரம்பித்த சில ஆண்டுகளில் விதைகளை சேகரிக்கலாம்.
விதை நேர்த்தி:
- 24 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைக்கலாம்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- மார்ச் - மே மாதங்களில் நேரடியாக நாற்றாங்களில் விதைக்கலாம். செடி தருணத்தில் நிழல் தருவது அவசியமாகும்.
- 45 நாட்கள் கழித்து பாலித்தீன் பைக்கு மாற்ற வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நடவு தொழில்நுட்பம்:
- பருவ மழைக்கு முன்பு நடவு செய்தல் நன்று.
- நடவுக்கு முன் களையெடுத்து வேலி அமைக்க வேண்டும்.
குழியளவு:
- 45X45X45செ.மீ3 அளவில் குழி எடுத்து காய விட வேண்டும்.
பராமரிப்பு:
நீர்பாசனம்:
- முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.
கலைத்தல்:
- பழைய இறந்த கழிகளை நீக்கிவிட வேண்டும்.
முக்கிய பயன்கள் :
- சில இடங்களில் தேயிலைத் தோட்டத்திற்கு நிழல் தர வளர்க்கப்படுகிறது.
- இது நேரான, உயரமான, உறுதியான கழிகளைத் தருவதால் பல்வேறு வகையாகப் பயன்படுகிறது.
- காகிதம் மற்றும் அரக்கு தொழிற்சாலையில் பயன்படுகிறது.
- பிசின் இதிலிருந்து எடுக்கப்படும் முக்கியப் பொருளாகும்.
- இதனை நேரடியாக உபயோகிக்காமல் மற்ற பிசினுடன் கலந்து உபயோகிக்கப்படுகிறன்றது.
-->