நெல்ரை
அறிவியல் பெயர் :
அக்ரோகார்பஸ் பிராக்சினிபோலிஸ்
பொதுப்பண்பு :
- இது ஒரு பெரிய இலையுதிர் மரமாகும்.
- இலைகள் நல்ல பிரகாசமான சிவப்பு நிறத்தில் காணப்படும்.
- இதன் மரம் மெல்லியது மற்றும் வெளிர் பழுப்பு நிறமுடையது.
- மலர்கள் அடுக்காக அமைந்திருக்கும் மற்றும் வெள்ளை நிறம் கொண்டது.
- கனிகள் மெல்லியது மற்றும் அடர் பழுப்பு நிறமானது.
- விதைகள் சிறியதாகவும், பழுப்பு நிறமாகவும் காணப்படும்.
பரவல் :
- இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை தாயகமாக கொண்டது.
- இவை தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல பசுமை மாறா காடுகளில் வளரும் மரமாகும்.
மண் :
செம்மண், மணற்பாங்கான செம்மண், இரும்பொறை மண், சரளை மண், களிமண், களிமண்கூடிய அடைநிலம், கடலோர வண்டல் மண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1200 – 2000 மி.மீ
வெப்பநிலை :
35 - 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக கொண்டது.
உயரம் :
35 மீ உயரம் வரை வளரக்கூடியது.
- இவை விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
- நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் 19 மாதங்கள் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேகரித்து வைக்கலாம்.
- ஒரு கிலோ விதையில் தேராயமாக 27000 - 32000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 50 - 75 சதவிகிதம் ஆகும்.
- கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைக்க வேண்டும்.
- விதையானது தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- இரண்டு விதைகள் துளிர்விட்ட நாற்றானது பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
- விதை முளைப்புத்திறனானது 50 – 75 சதவிகிதமாகும்.
- நாற்றிற்கு தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நாற்று நடவு முறை :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு களைகள் எடுத்தல் மற்றும் உழுதல் மேற்கொள்ள வேண்டும். பின் வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.
- எரிபெருளுக்காக 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- இம்மரம் தோராயமாக 2200 - 2500 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
- தேயிலை போன்ற மலைப் பயிர்களுக்கு நிழல் தரும் மரமாகப் பயன்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இதன் இளம் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இம்மரம் பூக்கள் அதிகம் வைப்பதினால், தேனீ வளர்ப்புக்கு பயன்படுகிறது.
- இம்மரம் மரச்சாமான்கள் செய்யவும், மேஜைகள் செய்யவும் மற்றும் கட்டுமான பணிகளுக்கும் பயன்படுகிறது