டாமா மூங்கில்
அறிவியல் பெயர் :
டென்ரோகலாமஸ் ஹேமல்டோனி
பொதுப்பண்பு :
- குழுமமாக வளரக்கூடிய மரம்போன்ற பசுமை மாறா மூங்கிலாகும்.
- 12 – 25 மீ உயரம் வரை வளரக்கூடிய மூங்கிலாகும்.
- ஒவ்வொரு களியும் 9 – 20 செ.மீ சுற்றளவு கொண்டது.
- ஒவ்வொரு கணுவிற்கும் இடையேயான இடைவெளி 30 – 50 செ.மீ இருக்கும்.
- கணுவானது 12 – 20 மி.மீ தடிமன் கொண்டது.
பரவல் :
- இந்தியாவை தாயகமாக கொண்டது.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் வளரும் தன்மையுடையது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளர்கிறது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
700 – 4500 மி.மீ
வெப்பநிலை :
15 - 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது
நிலப்பரப்பு :
மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒளி விரும்பி மரமாகும்.
- பனி மற்றும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இம்மூங்கில் விதைகள் மற்றும் கிழங்கு மூலம் இயற்கையாக பெருக்கமடைகிறது.
- விதைகள் மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பூக்களானது நவம்பர் - மார்ச் மாத கால இடைவெளியில் பூக்கத்தொடங்குகிறது.
- விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் சராசரியாக 25000 - 35000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 70 - 75 சதவிகிதம் ஆகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்
- விதை நேர்த்தி தேவையில்லை.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. சேம்மண்
- தாய்பாத்தி நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். தாய்பாத்தியின் அளவு 10 x 1 மீ என்றளவு இருக்க வேண்டும்.
- 1.5 கிலோ விதைகள் ஒரு தாய்பாத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
- விதைக்கப்பட்டவுடன் வைக்கோல் கொண்டு தாய்பாத்தியை மூட வேண்டும்.
- பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
- விதைக்கப்பட்ட விதைகள் 10 – 20 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 3 மாதங்களாகிய நாற்றானது வளர் இடு பொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நாற்றுகள் மூலம் நடவு :
- மழை பருவத்தில் நாற்று நடவு மேற்கொள்ளப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
வேர் கிழங்கு நடவு முறை:
- 15 – 39 செ.மீ நீளமுள்ள வேர் கிழங்குகள் நடவிற்கு பயன்படுகிறது.
- கிழங்கிற்கு ஒரு கணுவாவது இருத்தல் அவசியமாகும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- மூங்கில் உற்பத்திக்கு இது ஒரு சிறந்த முறையாகும்.
- மூங்கிலுக்கு ஈரப்பதம் அவசியம் என்பதால் நாற்றங்காலிலும், நடப்பட்ட பின்பும் நீர் மேலாண்மை மிக முக்கியமாகும்.
- கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிய பராமரிப்பு பணிகளில் ஒன்றாகும்.
- 5 வருடங்கள் முதல் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மூங்கில் தோராயமாக 4000 – 4500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
- தக்காளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
தண்டு:
- தண்டுகள் கூடை செய்யவும், ஏணிகள் மற்றும் தயிர் கடையும் குச்சிகள் செய்யவும் பயன்படுகின்றன.
- இளம் குறுத்து உணவாக பயன்படுகிறது.
விதைகள்:
- மூங்கில் அரிசி சமையலுக்கு பயன்படுகிறது.
மருத்துவம்:
- இலை மற்றும் கணுவிடை பகுதிகள் பழங்காலத்திலிருந்தே மருந்தாக பயன்படுகிறது.
வேளாண்காடுகள்
- இம்மூங்கில் பள்ளதாக்குகளில் நடுவதற்கு பயன்படுகிறது.