ஆச்சா மரம்
அறிவியல் பெயர் :
பாகுனியா ரெசிமோசா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது நீளம் கலந்த கருப்பு நிறமுடையது.
- பூக்கள் சிறியது மற்றும் வெள்ளை நிறமுடையது.
- நெற்றானது அடர் சாம்பல் நிறமுடையது. ஒவ்வொரு நெற்றிலும் 12 – 30 விதைகளிருக்கும்.
- விதைகள் அடர் சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
நல்ல நீர் தேங்கா தன்மை கொண்ட மண்ணில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
4.5-7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
750 - 2200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 5000 மி.மீ
வெப்பநிலை :
38 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- அதிக ஒளி விரும்பி மரமாகும்.
- பனி மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள் மூலம் குறைந்தளவு இனப்பெருக்கமடையக்கூடியது.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது ஜனவரி - மார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிராம் விதையில் 7 – 8 விதைகளிருக்கும்.
- விதைகள் ஒரு வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
- விதை முளைப்புத்திறன் 60 – 70 சதிவிகிதமாகும்.
- விதைகள் குளிர் நீரில் 24 மணிநேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
- குறிப்பிட்ட கால இடைவெளியில் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
- நாற்று பை களைகளின்றி பாதுகாக்கப்படகிறது.
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலம் தொடங்கியபின் விதைகள் நேரடியாகவே நிலத்தில் விதைக்கப்படுகிறது.
நாற்றுகள் நடவு முறை :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் ஜுலை மாதத்தில் எடுப்பது சிறந்ததாகும்.
- வறண்ட பகுதிகளில் குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- களையெடுத்தல் மற்றும் நிலத்தை உழுதல் அவசியமாகும்.
- 20 – 70 வருடங்கள்
- இலைகள் கால்நடை தீவனமாக வருடத்தில் இரு முறை சேகரிக்கப்படுகிறது. ஏப்ரல் - மே மற்றும் செப்டம்பர் - அக்டோபர் ஆகிய பருவங்களில் இலைகள் சேகரிக்கப்படுகிறது.
- இலைகள் உற்ப்திக்காக 3 வருடத்திற்கு ஒரு முறை மரத்தின் மேல் கிளைகள் வெட்டப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இம்மரம் விறகிற்காக பயன்படுத்தப்படுகிறது.
- மரப்பட்டையிலிருந்து சாயம் எடுக்கப்படுகிறது. மேலும் மரப்பட்டை நார்கள் உற்பத்திக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
- இம்மரம் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் இலைகள் பீடி தயாரிக்க பயன்படுகிறது.
- இம்மரம் வேளாண் உபகரணங்கள் தயாரிக்க பயன்படுகிறது.