சரக்கொண்றை
அறிவியல் பெயர் :
கேசியா பிஸ்டுலா
பொதுப்பண்பு :
- 8 – 12 மீ உயரம் வரை வளரக்கூடிய சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை மென்மையானது மற்றும் இளமையில் பச்சை கலந்த சாம்பல் நிறமாகவும் முதிர்ந்த பின் அடர் சாம்பல் நிறமாகவும் மாற்றமடைகிறது.
- முதிர்ந்த நெற்று 30 – 60 செ.மீ நீளமுடையது மற்றும் ஒவ்வொரு நெற்றிலும் 40 – 100 விதைகளிருக்கும்.
- பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
- இம்மரம் இயற்கையாகவே சந்தன மரத்திற்கு ஒட்டுண்ணி தாவரமாக பயன்படுகிறது.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5 (ம)7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1220 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 – 1900 மி.மீ
வெப்பநிலை :
35 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் நெற்றிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- விதைகள் நீண்ட நாட்களுக்கு முளைப்புத்திறனை தக்க வைத்துகொள்ளும் தன்மையுடையது.
- விதை முளைப்புத்திறன் 22 – 60 சதிவிகிதமாகும்.
- நாற்று வளர்ச்சி திறன் 12 – 47 சதவிகிதமாகும்.
- கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 5 நிமிடம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. விதைகள் விதைப்பு மார்ச் - ஏப்ரல் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- தாய்பாத்தியை களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
- நாற்றுகள் இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் உழுதல் அவசியமாகும்.
<!-- [if gte mso 9]>