நீல சம்பங்கி மரம்
அறிவியல் பெயர் :
புளுமெரியா ரூப்ரா
பொதுப்பண்பு :
- சம்பங்கி மரம் 8 மீ உயரம் வரை வளரக்கூடிய அகன்ற கிளைகளையுடைய சிறிய அல்லது சராசரி அளவுடைய மரமாகும்.
- இலைகள் கிளைகளின் நுனியில் குழுமமாக அமைந்திருக்கும். இலைகள் அடர் பச்சை நிறமுடையது மற்றும் பளபளப்பானது.
- பூக்கள் குழுமமாக அமைந்திருக்கும். பூக்களும் இலைகளைப்போல நுனியில் குழுமமாக அமைந்திருக்கும். பூவானது மத்தில் மஞ்சள் நிறமாக இருக்கும்.
- காய்கள் காய்ந்தபின் இதன் இறகு போன்ற விதைகள் காற்றின் மூலம் பரவுகின்றது.
பரவல் :
- இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
500 - 1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 – 1500 மி.மீ
வெப்பநிலை :
40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி, கடற்கரை பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நன்கு வளர்ந்த மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- மலர்கள், வேர்கள், விதை மற்றும் பால் மருந்தாக பயன்படுகிறது.
- மலர்கள் பூஜைக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- இதன் சாம்பல் நிற மரம் கடினமானது மற்றும் மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- மரம் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
- அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.