அசோக மரம்
அறிவியல் பெயர் :
சரக்கா அசோகா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்தவை. இளமையில் இளஞ்சிவப்பு நிறமாகவும் முதிர்ந்தவுடன் அடப் பச்சை நிறமானவும் மாற்றமடைகிறது.
- மரப்பட்டை அடர் பச்சை நிறமுடையது.
- மணமுடைய இதன் மலர்கள் ஆரஞ்சு அல்லது முஞ்சள் நிறமுடையது.
- காய்கள் 4 – 8 விதைகளை கொண்டது. காய்கள் குழுமமாக காய்க்கவல்லது.
- காய்கள் கருப்பு நிறமுடையது மற்றும் இதன் கனியுறையானது முதிர்ந்தவுடன் உதிர்ந்துவிடக்கூடியது.
பரவல் :
வாழிடம் :
இம்மரம் எரிமலை பகுதிகளிலுள்ள மண்ணிலும் மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகளிலும் அதிகம் வளர்கின்றது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளம் மிக்க மண்ணில் நன்கு வளரக்கூடியது.
மண் pH :
5.5 – 6
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
720 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
700 – 1500 மி.மீ
வெப்பநிலை :
25 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரக்கூடியது.
- மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- விதைகள் மூலம் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த விதையானது டிசம்பர் - ஜனவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 90 - 100 விதைகளிருக்கும்.
- குளிர் நீரில் 12 மணி நேரம் ஊர வைக்கப்பட வேண்டும்.
- மார்ச் மாதம் நாற்றுகள் உற்பத்தி செய்ய சிறந்தது
- விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய 25 x 20 செ.மீ அளவுடைய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 15 நாட்களில் விதைகள் முளைத்து விடுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு குழியிலும் மேல் மண் மற்றும் எரு கலந்தகலவை 10 கிராம் இட வேண்டும்.
- இம்மரம் அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் வளர்க்கப்படுகிறது.
- மழை பொழிவு இல்லாத காலகட்டத்தில் நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
- வளர்ந்த பின் மரத்தை சுற்றி வளையம் தேன்றினால் நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
- எரிபெருளுக்காக 15 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு கிலோ மரப்பட்டை 30 – 35 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இம்மரம் எப்பொழுதும் பசுமையாகவே இருப்பதால் அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
- இதன் மரப்பட்டை மருந்திற்காக அதிகளவில் எடுக்கப்படுகிறது.
- மரப்பட்டை வலி நிவாரணி, காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுகிறது.
-->