ஈட்டி மரம்
அறிவியல் பெயர் :
டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா
பொதுப்பண்பு :
- அகன்ற கிளைகளையுடைய பெரிய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
- பூக்கள் வெண்நிறமாக காணப்படும்.
- நெற்றானது தட்டையானத மற்றும் பெரியது மற்றும் 1 – 3 விதைகளை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
பசுமை மாறா காடுகள் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகளவு வளரும் மரமாகும்.
மண் :
செம்பொறைமண், வண்டல் மண், கரிசல் மண்ணில் வளரக்கூடியது. வடிகால் சரியாக இல்லாத இடத்தில் வளர்ச்சி குன்றிக் காணப்படும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
250 - 800 மி.மீ
வெப்பநிலை :
45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வலிமையான ஒளி விரும்பி மரமாகும்.
- நீண்ட வறட்சியை தாங்கும், ஆனால் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- நெற்றானது பழுப்பு நிறமாக மாறிய பின் சேகரிக்கப்படுகிறது.
- நேற்றிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்பட்டு, சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- முறையாக உலர்த்தப்பட்ட விதைகள், நன்றாக பராமரிக்கப்படின் ஒரு வருடம் வரை சேமிக்கலாம்.
- ஒரு கிலோ விதையில் 18500 - 35000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 60 - 70 சதவிகிதம் ஆகும்.
விதைநேர்த்தி:
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
நாற்றங்கால் தொழில் நுட்பம்:
- விதையானது நேரடியாக தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
- விதைகள் விதைக்கப்பட்டதிலிருந்து 6 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- நாற்றுகளுக்கு தண்ணீர் தெளித்தல் மற்றும் அதிக சூரிய வெப்பத்திலிருந்து பராமரிப்பது அவசியமானதாகும்.
- நூற்றானது 2 இலைகள் துளிர்ந்த பிறகு வளர்ப்பு ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
- 6 மாதங்களான நாற்றுகள் நடவு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- நாற்று நடப்பட்ட பகுதியை சுற்றி மண்ணை இடிக்கடி கொத்தி விடுதல் வேண்டும்.
- நேரான மரம் கிடைக்க வேண்டுமெனில் மரங்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருக்க வேண்டும்.
-
- தோராயமாக 25 – 30 வருடங்கள்.
-
சந்தை மதிப்பு :
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
- ஓராண்டு தாவரம் மற்றும் பழமரங்களை ஊடுபயிரியாக பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
மரம்:
- இதன் மரம் மரச்சாமான்கள் செய்யவும், இசை கருவிகள் செய்யவும் மற்றும் விலையுயர்ந்த மர உபயோக பொருட்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
- இம்மரம் அதிகப்படியாக காப்பி தோட்டங்களில் நிழலுக்காக பயிரிடப்படுகிறது.
- மண் அரிமானம் அதிகமுள்ள பகுதிகளில் பயிரிடுவதால் மண் அரிப்பை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
மண்நேர்த்தி :
- தோதகத்தி மரத்தின் இலைகள் மட்கி ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
மருத்துவம்:
- மரத்தின் பட்டையிலிருந்து பெறப்படும் டானின் வயிற்றுப் போக்கு, தொழுநோய், செரிமான கோளாறுகள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.
மண்நேர்த்தி:
- தோதகத்தி மரத்தின் இலைகள் மட்கி ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
-->