அரச மரம்
அறிவியல் பெயர் :
பைகஸ் ரிலிஜியோசா
பொதுப்பண்பு :
- அரச மரம் ஒரு இலையுதிர் மரமாகும். இம்மரம் ஈர நிலப்பகுதிகளில் பசுமை மாறா மரமாகவும் செயல்படுகிறது.
- மரப்பட்டை சிவப்பு கலந்த பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமுடையது.
- இலைகள் அடுத்தடுத்து அமைந்து காணப்படும். இலைகள் பளபளக்கக்கூடிய அடர் பச்சை நிறமுடையது.
- இருபால் மலர்களை கொண்டது. மலர்கள் சிவப்பு நிறமுடையது.
- காய்கள் கேப்சியூள் வகையை சேர்ந்தது மற்றும் ஆரஞ்சு நிறமுடையது. சில சமயங்களில் இளஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது அல்லது சிவப்பு நிறமாகவோ காணப்படும்.
- இம்மரம் இந்து சமயத்தில் ஒரு முக்கிய மரமாக வழிபடப்படுகிறது.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.
வாழிடம் :
இம்மரம் அனைத்து வகையான காடுகளிலும் வளரும் தன்மையுடையது. இம்மரம் மற்ற மரங்களின் மீது வளர்ந்து பெரிதாகும் தன்மையுடையது. கொதுவாக இம்மரம் சமவெளி மற்றும் மேட்டுப்பகுதிகளில் வளர்கிறது.
மண் :
நீர் தேங்காத தன்மை கொண்ட ஆழமான வண்டல் கலந்த செம்மண்ணில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5 - 6.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1520 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500-5000மி.மீ
வெப்பநிலை :
16 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- ஒட்டு நாற்று உற்பத்தி மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
- பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
- காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
- தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
- விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
- நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
- வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும். இடைவெளியானது 5 – 10 மீ என இருக்க வேண்டும்.
- மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
கால்நடை தீவனம் :
- இம்மரத்தின் இலைகள் யானை, ஒட்டகம், ஆடு மற்றும் கால்நடைகளுக்கு ஒரு மிகச்சிறந்த தீவனமாகும்.
- இலைகளில் 10 – 14 சதவிகித புரோட்டீன் உள்ளது. இவை எளிதாக மெல்லக்கூடியதாகவும், செரிமானமடையக்கூடியதாகவும் உள்ளதால் விலங்குகள் இதனை விரும்பி உண்ணுகின்றன.
மரம் :
- இம்மரம் ஓரளவு வலிமையானதாகும்.
- இம்மரம் பெட்டிகள் தயாரிக்க, மலிவான பலகைகள் தயாரிக்க, கரண்டி தயாரிக்க மற்றும் மரகிண்ணம் தயாரிக்க பயன்படுகிறது.
ரப்பர்:
- இதன் மரப்பாலில் இருந்து இரப்பர் தயாரிக்கப்படுகிறது.
டானின்:
- மரப்பட்டைகள் டானின் தயாரிப்பில் பயன்படுகிறது.
மருத்துவம்:
- இதன் கனிகள் இரத்தம், இருதய நோய்கள், செரிமானக் கோளாறுகள் மற்றும் மல இலக்கியாக பயன்படுகிறது. மேலும் கனிகள் குளுமை தன்மையுடையவை.
-->