குமிழ்
அறிவியல் பெயர் :
மெலினா அர்போரியா
பொதுப்பண்பு :
- இது ஒரு இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
- இலையானது வெளிர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் பச்சை கலந்த வெளிர் நிறமாகவும் காணப்படும். இம்மரம் வெண்ணிற தோல் போத்திய கருமையான விதையை கொண்டது.
- விதையின் அளவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.
- பூக்கள் சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
- கனியானது டுரூப் வகையை சேர்ந்தது.
- ஒவ்வொரு கனியும் 2 - 3 விதைகளை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
இம்மரம் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
இவை வண்டல் மண் கலந்த செம்மண்ணில் அதிகம் வளர்கிறது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200மீ வரை வளரும்
மலையளவு :
750மி.மீ -2500மி.மீ
வெப்பநிலை :
30 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது அதிக ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை மற்றும் வறட்சியை தாங்கக் கூடியவை.
- மறுதாம்பு மூலம் நன்றாக தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- இயற்கையாகவே விதைகள் மூலம் முளைக்கக்கூடியது மற்றும் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூயது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- முதிர்ந்த விதைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சுத்தம் செய்யப்பட்டு உலர்த்தப்பட்ட அறையில் விதையானது 24 மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
- சுத்தம் செய்யப்பட்ட விதையின் மேற்தோலானது நீக்கப்படுகிறது.
- காப்பி விதைஉறை நீக்கி கொண்டு அதிகப்படியான விதைகள் சுத்தம் செய்யப்படுகிறது.
- சுத்தம் செய்யும் முன் தண்ணீரில் 24 மணி நேரம் ஊர வைப்பதால் சுத்தம் செய்தல் எளிதாகிறது.
- சுத்தம் செய்யப்பட்ட விதைகள் தட்டுகளில் கொட்டி உலர்த்தப்படுகிறது.
- ஊலர்த்தப்பட்ட விதைகள் வெயிலில் காய வைக்கப்படுகிறது.
விதை நேர்த்தி:
- குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- நாற்றானது விதைகள் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- விதையானது ரூட் டிரெயினரில் நேரடியாகவும் விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்ட விதையானது 0.5 செ.மீ மணல் கொண்டு மூடப்படுகிறது.
- விதையானது தூவுதல் முறை மூலம் தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தியானது ஒரு நாளைக்கு இரு முறை பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 1500 – 2000 விதைகள் இருக்கும்.
- மரத்திற்கு மரம் விதையின் அளவு மற்றும் எடை மாறிக்கொண்டே இருக்கும்.
- விதையானது விதைத்தவுடன் விரைவாக வளரும் தன்மை கொண்டது.
- தாய்பாத்தி முழுதும் சூரிய ஒளி படுமாறு இருத்தல் அவசியம்.
- ஒரு குறிப்பிட்ட உயரம் வளர்ந்தவுடன் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- 4 மாதங்களான நாற்றுகள் நடவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- மரக்கூழ் தயாரிப்பிற்கு நடப்படும் மரத்திற்கான இடைவெளியானது 2 x 2 மீ என இருக்க வேண்டும்.
கவாத்து செய்தல் :
- கவாத்து செய்தல் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
- கவாத்து செய்வதால் மரம் நேராகவும் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கவும் செய்கிறது.
- 6 மாதத்திற்கு ஒரு முறை கவாத்து செய்வது இன்றியமையாதது ஆகும்.
- கவாத்து செய்யப்பட்ட கிளைகளை விறகிற்காக பயன்படுத்தலாம்.
மரங்களை அகற்றுதல் :
- மரங்களை அகற்றுதல் மிகவும் முக்கியமாகும். மரம் வளர வளர மரங்களுக்கிடையோன இடைவெளி குறைகின்றது.
- 4 – 5 வருடங்களான மரத்திற்கிடையோன இடைவெளியை அதிகரிக்க வேண்டும்.
- வரிசையில் அடுத்தடுத்த மரங்கள் ஒரு குறிபிட்ட வருட இடைவெளியில் நீக்கப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் தோராயமாக 7000 – 8000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
ஊடுபயிர் சாகுபடி :
- குமிழ் மரம் தமிழ்நாட்டில் வேளாண் காடுகளுக்கு அதிகமாக பயிரிடப்படுகிறது.
- குமிழ் மரத்துடன் நிலக்கடலை, தர்பூசணி, பயிர்கள், மக்காச்சோளம் மற்றும் வாழை ஆகியவை பயிரிடப்படுகிறது.
- தமிழகத்தில் புதுகோட்டை மாவட்டத்தில் பல்பயிர் சாகுபடி குமிழ் மரத்தை கொண்டு செய்யப்படுகிறது.
- குமிழ், தென்னை, வாழை மற்றும் மிளகு சேர்த்து செய்யப்படும் சாகுபடியும் நல்ல விளைச்சளை தரவல்லது.
முக்கிய பயன்கள் :
- இம்மரமானது இதன் மரம் மற்றும் மருத்துவ பயன் காரணமாக அதிகமாக பயிரிடப்படுகிறது.
- இம்மரமானது அதிக மகசூலை தருவதால் விவசாயிகள் இதனை அதிகம் விரும்பி பயிரிடுகின்றனர்.
- இம்மரம் மரக்கூழ் தயாரிக்க, ஒட்டுப்பலகை தயாரிக்க, தீக்குச்சி தயாரிக்க, சிற்பங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், பட்டு உற்பத்திக்கும் பயன்படுகிறது.
- இம்மரம் நிழலுக்காக காப்பி மற்றும் கொக்கோ தோட்டங்களில் பயரிடப்படுகிறது.
நார்:
- இதன் கட்டையிலிருந்து சிறந்த கூழ் கிடைக்கும்.
- இவை தரம் குறைந்த காகிதங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
- மரப்பட்டை, இலைகள், வேர்கள் ஆல்கலாய்டுகளை கொண்டுள்ளன.
- இவை இந்து மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
- பழம் மற்றும் மரப்பட்டையில் உள்ள மருத்துவ குணம் காய்ச்சலை குணப்படுத்துகிறது.
-->