மந்தாரை
அறிவியல் பெயர் :
பாகுனியா பர்பூரியா
பொதுப்பண்பு :
- சராசரி அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
- மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது. முதிர்ந்த பட்டை மிகவும் கடினமானது.
- இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
- பூக்கள் பெரியது, மணமானது மற்றும் இளஞ்சிவப்பு நிறமுடையது.
- அடர் சாம்பல் நிறமுடைய நெற்று 12 – 16 விதைகளை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5 (ம) 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1900 மி.மீ
வெப்பநிலை :
35 – 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- குறைந்தளவு ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமைமாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது ஜனவரி - மார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 4000 - 5000 விதைகளிருக்கும்.
- விதைகள் 8 மாதம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
- விதை முளைப்புத்திறன் 30 – 100 சதிவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி 95 – 10 சதவிகிதமாகும்.
- விதைகள் வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
- குறிப்பிட்ட கால இடைவெளியில் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
- நாற்று பை களைகளின்றி பாதுகாக்கப்படகிறது.
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலம் தொடங்கியபின் விதைகள் நேரடியாகவே நிலத்தில் விதைக்கப்படுகிறது.
நாற்றுகள் நடவு முறை :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் ஜுலை மாதத்தில் எடுப்பது சிறந்ததாகும்.
- வறண்ட பகுதிகளில் குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- களையெடுத்தல் மற்றும் நிலத்தை உழுதல் அவசியமாகும்.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 2000 – 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இம்மரம் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
- இது ஒரு அலங்கார மரமாக தேட்டங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிறது.
- இதன் பூக்கள் செப்டம்பர் - டிசம்பர் கால இடைவெளியில் பூக்கவல்லது.
தீவனம்:
- இலைகளில் 13 – 15% புரதம் காணப்படுகிறது. மிதமான தீவனமாக பயன்படுகிறது.
மலர்கள்:
- காய்கறியாகவும், ஊறுகாய் செய்யவும் உதவுகிறது.
மரப்பட்டை:
- மலிவான படிகப்பொருள், சாயம், மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது.
- மரம் முக்கியமாக அழகான மலர்களின் உற்பத்திக்கு வளர்க்கப்படுகிறது.
-->