குதிரை பிடுக்கு மரம்
அறிவியல் பெயர் :
ஸ்டெர்குலியா ஃபோடிடா
பொதுப்பண்பு :
- இது பரவக்கூடிய கவர்ச்சிகரமான இலையுதிர் மரம்.
- குடை வடிவமுடைவை. 40மீ உயரம் வரை வளரக் கூடியது.
- உருளை வடிவ அடிப்பகுதியானது 90 செ.மீ விட்டமுடையது.
- உணவாகவும், மருந்தாகவும், பல பொருட்களை தயாரிக்கவும் பயன்படுகிறது.
- வெப்ப மண்டலப் பகுதிகளில் அழகுத்தாவரமாக உள்ளது.
பரவல் :
- கிழக்குஆசியா, இலங்கை, மியான்மர், கம்போடியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா
வாழிடம் :
ஆற்றுப்டுகைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வளரும்.
மண் :
வண்டல் மண், செந்நிறக் களிமண் வகை.
மண் pH :
6-7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
750-1000 மீ
மலையளவு :
900-2000 மி.மீ
வெப்பநிலை :
16-30 செல்சியஸ்
நிலப்பரப்பு :
கடலோரப் பகுதிகள்
மரப்பண்பு :
- இலையுதிர் மரம், வேகமாக வளரக்கூடியது. நீர்பாசனம் இருந்தால் அனைத்து வகை மண்ணிலும் வளரும்.
வளரியல்பு :
ஈரமிக்க இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக வளரக் கூடியது.
உயரம் :
40மீ
இயற்கை மறு உருவாக்கம்:
செயற்கை மறு உருவாக்கம்:
- மரக்கன்றுகள் மற்றும் வெட்டுத்துண்டுகள்
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- சேகரித்த விதைகள் சூரிய ஒளியில் காயவைத்து சதைப்பகுதியை நீக்க வேண்டும்.
- புதிதாக சேகரித்த விதைகள் விதைப்பதற்கு ஏற்றது.
- துண்டுகள் மூலமும் வளரும்.
விதை நேர்த்தி:
- விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- நன்கு உழுத நிலத்தில் நாற்றாங்கால் படுக்கைகளை 100மீx25மீ என்ற அளவில் அமைக்க வேண்டும்.
- 1.25 இலட்ச மரக்கன்றுகள் 120 படுக்கைகளில் வளர்க்கலாம்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 30-45செ.மீ ஆழத்தில் நிலத்தை உழ வேண்டும்.
- 6x6மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- கோடைகாலங்களில் சூரிய ஒளி குழிகளில் விழ வேண்டும்.
- இக்குழியில் மேற்பரப்பு மணல், உரம் மற்றும் பொட்டாஷ் இட வேண்டும்.
பராமரிப்பு மற்றும் நோய்:
நீர்ப்பாசனம்:
- மழைக்காலங்களில் நீர்ப்பாசனம் தேவையில்லை.
- ஆனால் வறண்ட காலங்களில் நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
முக்கிய பயன்:
- இதன் விதைகள் அப்படியே உண்ணக்கூடியவை அல்லது எண்ணெயில் வறுத்தும் உண்ணலாம்.
- கோகோவின் மணம், சுவை நிறைந்தது.
- இதனை வறுக்கும்போது வேர்கடலை போன்றது.
- நீளவடிவ விதைகள் 25மி.மீ நீளமும், 12மி.மீ விட்டமும் கொண்டது.
- இளம் மரத்தின் வேர்களும் அப்படியே உண்ணக்கூடியவை.
- இதன் மரப்பட்டை நார் போன்றது. அழகுசாதனம் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
-->