இலவம்பஞ்சு
அறிவியல் பெயர் :
சீபா பென்டேன்ட்ரா
பொதுப்பண்பு :
- மிதமான அளவு முதல் பெரிய அளவிலான, இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
- இலையானது அடர் பச்சை நிறமாகவும், பூக்கள் பால் போன்ற வெளிர் நிறமாகவும் காணப்படும்.
- விதையானது உருளையாகவும், 10 – 15 செ.மீ நீளமுடையதாகவும் காணப்படும். நெற்றானது 5 அறைகளையுடையது மற்றும் பஞ்சுபோன்ற திசுவை கொண்டது.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகளிலும் மற்றும் இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரக்கூணயது. ஆழமான மனற்பாங்கான மண் மற்றும் செம்பொறை மண்ணில் நன்கு வளரக்கூடியது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750-3000மி.மீ
வெப்பநிலை :
18 - 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வலிமையான ஒளி விரும்பி, மற்ற தாவரங்களுடன் போட்டியிடும்.
- நீண்ட வறட்சியை தாங்கும், ஆனால் பனியை அளவாகவே தாங்கும்.
வளரியல்பு :
இலையுதிர் மரம்மாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- எதிர்பார்க்கும் அளர்விற்கு வெற்றியை தருவதில்லை.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- விதையானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 45000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 90-95 சதவிகிதம் ஆகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்
விதை நேர்த்தி
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் அல்லது குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் பைக்கு 2-3 விதைகள் என விதைக்கப்பட வேண்டும்.
- ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- வட கிழக்கு பருவ மழையின் பொழுது நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- 12-15 செ.மீ உயரம் வரும் வரை இலகுவான நிழலில் வளர்க்க வேண்டும்.
- 45-60 செ.மீ உயரம் வரை முழுமையான சூரிய ஒளியில் வளர்க்கலாம்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு:
- பருவ மழை சமயத்தில் 3.7 x 3.7 மீ இடைவெளியில் 3 – 6 விதைகள் நேரடியாக நடப்படுகிறது.
நாற்றங்கால் உற்பத்தி நாற்றுகள் :
- நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
- மேல் மண் கொண்டு நாற்றுகள் நடப்படுகிறது.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்ட முதல் வருடத்தில் களைகள் எடுப்பது அவசியமாகும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- பக்க கிளைகள் அகற்றுதல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன் பஞ்சு பொருளாதார முக்கித்துவம் வாய்ந்த பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- பஞ்சுகள் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கவும் மற்றும் இதர பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் பஞ்சு குளிர் சாதன பெட்டிகளிலும் , மற்ற குளிர் சாதன பொருட்களின் பாகங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
- தலையனைகள் தயாரிக்கவும், மற்ற வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
கொழுப்பு அமிலங்கள்:
- சோப்பு தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் பிண்ணாக்கு அதிக புரோட்டீன் கொண்டது. எனவே கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
கொழுப்பு அமிலங்கள்:
- விதையில் 2-25% உலராத எண்ணெய் உள்ளது.
- சோப்பு தயாரிக்க உராய்வு காப்பு பொருள் மற்றும் சமயலிலும் பயன்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
- அடர்த்திமிக்க இலையானது தலைவிலிக்கு எதிராக பயன்படுகிறது.
- வேர்க்கசாயம் எடீமா மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
- கோந்து சாப்பிட வயிறு உபாதை இருமல் நீங்கும்.
-->