புளிய மரம்.
அறிவியல் பெயர் :
டேமரிண்டஸ் இண்டிகா
பொதுப்பண்பு :
- 30 மீ உயரம் வரை வளரக்கூடிய அகன்ற கிளைகளையுடைய பெரிய பசுமை மாறா மரமாகும்.
- இதன் மலர்கள் நறுமணம் கமலக்கூடியது. வறண்ட பகுதிகளில் இது இலையுதிர் மரம் போன்று இலைகளை உதிர்த்துவிடுகிறது.
- இதன் பழம் சமையலுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
பரவல் :
- தென்னிந்தியா இம்மரத்தின் தாயகமாகும். ஆனால் இந்தியா முழுவதும் பரவலாக வளரும் தன்மையுடையது.
- இவை வெப்பமய்டல பகுதிகளிலும் நன்கு வளரக்கூடிய தன்மையுடையது.
வாழிடம் :
ஈர இலையுதிர் காடுகளிலும் மற்றும் வெப்பமய்டல பசுமைமாறா காடுகளிலும் வளர்கிறது.
மண் :
அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
5.5 - 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 - 1900 மி.மீ
வெப்பநிலை :
35 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
வெப்பமண்டல பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சில சமயங்களில் சூழ்நிலை காரணிகளால் விதை முளைக்கப்படுவது பாதிக்கப்படுகிறது. துரிசாக உள்ள நிலங்களில் கூட இதன் விதைகள் முளைக்கும் தன்மை கொண்டது.
- நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதையானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட வஜதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் 6 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.
- ஒரு கிலோ விதையில் 1800-2000 விதைகள் இருக்கும்.
- ஒவ்வொரு நெற்றும் 3 - 10 விதைகளை கொண்டிருக்கும்
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் அல்லது குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
- மார்ச் - ஏப்ரல் மாதங்களில் 20 -25 செ.மீ இடைவெளியில் தாய்பாத்தியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
- விதைகள் விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் மளைக்க துவங்கி ஒரு வாரத்திற்குள் முளைத்து விடுகிறது.
- 30 - 40 செ.மீ உயரமுடைய 3 - 4 மாத வயதுடைய மரக்கன்றுகள் ஜீலை மாதம் நடவு செய்ய ஏற்ற அளவை அடைகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு :
- 45 செ.மீ3 அளவு வெட்டிய குழியில் ஜீலை – ஆகஸ்ட் மாதம் நாற்றானது நடவு செய்யப்படுகிறது.
- விதையானது 1.5 செ.மீ ஆழத்தில் விதைக்கப்படுகிறது.
- நேரடி விதைப்பில் இடைவெளியானது 4 – 5 மீ நிற்ணயிக்கப்படுகிறது.
நாற்றுகள் நடவு :
- மழை பருவ காலத்தில் 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- 70 – 80 சதவிகித நாற்றுகள் வெற்றிகரமாக வளர்கின்றன.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- புளிக்காக இம்மரம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆதலால் கிளைகளை எக்காரணத்தை கொண்டும் வெட்;டகூடாது.
- தழைசத்து, மணிசத்து மற்றும் சாம்பல்சத்து ஆகியவற்றை 200:150:250 என்றளவு ஒவ்வொரு வருடமும் 25 கிலோ எரு மற்றும் 2 கிலோ வேப்பம்பிண்ணாக்குடன் சேர்த்து இட வேண்டும்.
- 4 வருடங்களான மரங்கள் பூக்கத்துவங்குகிறது. ஆனால் 9 வருடங்களான மரங்கள் அதிகளவில் காய்க்கவல்லது
- நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
முக்கிய பயன்கள் :
- இதன் காயானது சமையலுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
- இதன் விதை ஜாம் தயாரிக்கவும் பிற உணவு பொருட்கள் தயாரிக்வும் பயன்படுத்தப்படுகிறது.
- துணிகளை பாலிஸ் செய்வதற்கு பயன்படுகிறது.
- ஒட்டுப்பலகை தயாரிப்பில் அதன் மரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
- இதன் விதையிலிருந்து டானின் எடுக்கப்படுகிறது.
- மரம் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகிறது.