துறிஞ்சி மரம்
அறிவியல் பெயர் :
அல்பைசியா அமாரா
பொதுப்பண்பு :
- இது ஒரு சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
- மரம் அடர் பச்சை நிறத்தில் காணப்படும்.
- பூக்கள் மஞ்சள் நிறமாகவோ அல்லது வெளிர் சாம்பல் நிறமாகவோ காணப்படும்.
- நெற்று மற்றும் விதையானது வெளிர்பச்சை நிறமாக காணப்படும்.
- ஒரு நெற்றில் 6 – 8 விதைகள் இருக்கும்.
பரவல் :
வாழிடம் :
இவை பொதுவாக தென்னிந்தியாவின் வறண்ட இலையுதிர் காடுகளிலும், முட்புதர் காடுகளிலும் அதிகம் வளரும் மரமாகும்.
மண் :
இவை செம்மண், சரளை மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் ஆகியற்றில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
900 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
600 – 1000 மி.மீ
வெப்பநிலை :
30 – 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயற்கை மறு உருவாக்கம்:
- இவை விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது. மறுதாம்பு மூலமும் இனப்பெருக்கமடையக்கூடியது.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
இனப்பெருக்கம்:
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
- நெற்றானது ஜனவரி – பிப்ரவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் தேராயமாக 14000 விதைகள் இருக்கும்.
- விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் 2 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கலாம்.
விதை நேர்த்தி
- தேவையில்லை. ஏனெனில் விதை முளைப்புத்திறன் 75 – 80 சதவிகிதம் ஆகும்.
- இளம் மரத்திலிருந்து சேகரிக்கப்படும் விதைகளின் முளைப்புத்திறன் முதிர்ந்த மரத்திலிருந்து சேகரிக்கப்படும் விதைகளின் முளைப்புத்திறனைவிட குறைவாகும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- விதையானது தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- இரண்டு இலைகள் துளிர்விட்ட நாற்றானது பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
- விதை முளைப்புத்திறனானது 50 – 75 சதவிகிதமாகும்.
- நாற்றிற்கு தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு களைகள் எடுத்தல் மற்றும் உழுதல் மேற்கொள்ள வேண்டும்.
- கால்நடைகள் மேய்ச்சலிலிருந்து வேலியிட்டு பாதுகாப்பது அவசியமாகும்.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 3200 என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் வீட்டு கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும், வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும், கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் இவை கைபிடிகள் தயாரிக்க பயன்படுகிறது.
- இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இதன் இலைகள் நெல் வயல்களுக்கு உயிர் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
பசுந்தீவனம்:
இலைகள் நல்ல தீவனமாகும்.
இலைகள், நெற்ப்பயிரில் பசுந்தாள் உரமாகும்.
எரிபொருள்:
சிறந்த எரிபொருளாகும்.
5049 கிலோ கலோரி/கி.கி கலோரி மதிப்பாகும்.
-->