பட்டாடி
அறிவியல் பெயர் :
ஸ்பாதோடியா கேம்பனுலேட்டா
பொதுப்பண்பு :
- சிறியது முதல் மிதமான அளவுடைய இலையுதிர் மரம் 25-35மீ உயரம், 60செ.மீ விட்டமுடைய அடித்தண்டு, மரப்பட்டை வெளிர்ந்த சாம்பல் கலந்த பழுப்பு நிறம்.
- இலைகள் எதிரெதிராக அல்லது வட்டமாக, இலைக்காம்பு 7.15செ.மீ நீளம் கொண்டது.
பரவல் :
- பிறப்பிடம் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு செனிகலின் கிழக்கில் இருந்து மேற்கு கென்யா மற்றும் தான்ஜனியா மற்றும் வட அங்கோலா மற்றும் தெற்கு காங்கோ.
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஆப்பிரிக்காவின் வெளிப்பகுதிகள்
மண் :
ஆற்றுப்படுகை சார்ந்த நன்கு நீர் வடியும் மண்.
மண் pH :
5.5 -6
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000மீ
மலையளவு :
1300-2000மி.மீ
வெப்பநிலை :
25-30 செல்சியஸ்
நிலப்பரப்பு :
ஓடையோரம் மற்றும் தட்டையான நிலப்பரப்பு
மரப்பண்பு :
இலையுதிர், வேகமாக வளரக்கூடிய அனைத்து வகையான மண்ணிலும் வளரக் கூடியது.
வளரியல்பு :
ஈர இலையுதிர் வெப்பமண்டல காடுகள்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக வளரும்
உயரம் :
வேகமாக வளரும்
- இனப்பெருக்கம்:
- 125000 விதைகள்/கிலோ சேகரித்த விதைகளை நன்றாக உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.
- வெட்டுத்துண்டுகள் மூலமும் பெருக்கமடைகின்றன.
- நாற்றுக் கன்றுகளை முதலில் தாய் படுக்கையில் வளர்த்து பின்பு பாலித்தீன் பைக்கு மாற்ற வேண்டும்.
- பாலித்தீன் படுக்கை 100மீx25மி.மீ அளவில் இருக்க வேண்டும்.10x1மீ என்ற அளவில் அமைக்கலாம்.
- 1:12 என்ற விதத்தில் பாலித்தீன் படுக்கை தேவைப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியளவு 45செ.மீx45செ.மீ இடைவெளி 3மீx3மீ.
- 10 கிலோ தொழு உரத்தினை ஒவ்வொரு குழியிலும் நிரப்ப வேண்டும்.
பராமரிப்பு மற்றும் நோய்:
- மொட்டு அழுகல் மற்றும் மற்ற பூஞ்சை நோய்களை தாங்கி வளராது.
முக்கிய பயன்கள் :
- எரிபொருளாகவும், பலகைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
- மலேரியா, எச்.ஐ.வி. வயிற்றுப்போக்கு, அல்சர், தோல் நோய்களுக்கும் மருந்தாக உபயோகப்படுகிறது.
-->