அச்சி நரிவிழி
அறிவியல் பெயர் :
கார்டியா செபஸ்டியானா
பொதுப்பண்பு :
- 25 அடி உயரம் வரை வளரக்கூடிய சிறிய பசுமை மாறா மரமாகும்.
- பூக்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது.
- இதன் இலைகள் அடர் பச்சை நிறமுடையது மற்றும் உப்பு காகிதம் போன்று சொரசொரப்பானது.
- காயானது வெள்ளை நிறமுடையது மற்றும் வட்ட வடிவமானது. ஒவ்வொரு காயிலும் 2 – 4 விதைகள் இருக்கும்.
பரவல் :
வாழிடம் :
500 மீ குறைவான கடல்மட்ட உயரம் கொண்ட நீர் ஓடும் பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
மண் :
பாறை மண் மற்றும் பறை மண் நிறைந்த கடற்கரையோரங்களில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
185 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1500 மி.மீ
வெப்பநிலை :
சராசரி வெப்பநிலையில் வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஆனால் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
- நோய் மற்றும் பூச்சி தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
வெப்பநிலையை பொறுத்து தன்மை வேறுபடுகிறது.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன் காய் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது.
- இதன் இலைகள் உப்பு காகிதம் போன்று பொருட்களை பளபளப்பாக்க பயன்படுகிறது.
- இதன் மரம் கடினமானது. எனவே மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.