மாமரம்
அறிவியல் பெயர் :
மாஞ்சிபெர்ரா இண்டிகா
பொதுப்பண்பு :
- பொரிய அகன்ற குடை போன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும்.
- மரப்பட்டையானது சாம்பல் நிறமுடையது.
- இலைகள் பளபளப்பானது மற்றும் இளமையில் இளஞ்சிவப்பாகவும் முதிர்ந்த பின் அடர் பச்சை நிறமாவும் காணப்படும்.
- கனியானது டுரூப் வகையை சேர்ந்தது.
- காயாக இருக்கும்பொழுது பச்சை நிறமாகவும், கனிந்த பின் மஞ்சள் நிறமாக காணப்படும்.
- ஒரு கனிக்கு ஒரு பெரிய ஓடுடக்கூடிய விதையை கொண்டிருக்கும்.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதியில் வளரும் மரமாகும்.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5 – 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 2500 மி.மீ
வெப்பநிலை :
24 - 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரக்கூடியது.
- பனி மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த விதையானது ஏப்ரல் - ஜுலை மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- இதன் மேல் தோழானது நீக்கப்பட்டு, நீர் தேங்காத தன்மை கொண்ட தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
- விதையானது சிறிது நாட்களிலேயே முளைப்புத்திறனை இழந்துவிடும் தன்மையுடையது.
- ஒரு கிலோ விதையில் 4400 - 7700 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 80 – 85 சதிவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி திறன் 40 – 80 சதிவிகிதமாகும்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தி விதைப்பு ஜுலை மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- இரண்டு இலைகள் துளிர்ந்த பின் நாற்றானது 22.5 செ.மீ2 இடைவெளியில் பாலித்தீன் பைகளுக்கு மறுநடவு செய்யப்படுகிறது. நாற்று இந்நிலையை எட்ட ஒரு வருடமாகிறது.
- 2 வருடங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நிலம் தயார் செய்தல் :
- குழியின் அளவு 1 மீ3 என இருக்க வேண்டும்.
- மேல் மண் மற்றும் 10 கிலோ எரு கலந்த கலவையானது குழிக்கு 100 கிராம் என இடப்படுகிறது.
இடைவெளி :
- பின் வரும் எவையேனும் ஒரு நடவு இடைவெளி பின்பற்றப்படுகிறது.
- பாரம்பரிய முறைப்படி 7 – 10 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
- அதிக அடர்த்தி நடவிற்கு 5 x 5 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
- வரிசை நடவு முறைக்கு 5 x 5 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது. அடுத்தடுத்த வரிசைக்கு 10 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
- ஒட்டு நாற்றுகள் குழியின் மத்தியில் வைத்து மேல் மண்ணை கொண்டு போற்த்தப்படுகிறது.
- நாற்று நடப்பட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது மிக அவசியமாகும்.
- ஒட்டு நாற்றானது நிலத்திலிருந்து 15 செ.மீ இருக்க வேண்டும்.
- களையெடுத்தல் அவசியமாகும்.
- முதல் வருடத்தில் மூன்று முறை களையெடுத்தல் அவசியமாகும்.
- இரண்டாம் வருடத்தில் இரு முறை களையெடுத்தல் அவசியமாகும்.
- மரத்தை சுற்றி 30 செ.மீ3 சுற்றளவிற்கு கொத்தி விடுதல் அவசியமாகும். 8 – 10 செ.மீ ஆழத்தில் மண்ணை நன்கு கொத்தி விடுதல் வேண்டும்.
- 75 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
- ஒவ்வொரு வருடமும் மார்ச் - ஜுன் கால கட்டத்தில் கனிகள் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு சதுர அடி மரம் தோராயமாக 1300 – 1550 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- ஊறுகாய் தயாரிக்கவும், குளிர்பானங்கள் தயாரிக்கவும் மற்றும் கூழாகவும் பயன்படுகிறது.
- இதன் பழம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பழம் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
- இதன் மரம் உள் கட்டுமான பணிகளுக்காகவும், மரச்சாமான்கள் செய்யவும், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும் மற்றும் படகு கட்டுமானத்திற்கும் பயன்படுகிறது.
- இதன் இலை சமய முக்கித்துவம் வாய்ந்தது. விழாக்காலங்களில் இதன் இலை தோறணங்கள் கட்டவும், சிறிய குச்சிகள் யாகம் நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
எரிபொருள்:
- எரிபொருள் மதிப்பு 4200 கி.கலோரி கி.
மரக்கட்டை:
- மரப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- எ-கா. படகு, கதவு தயாரிக்க, தச்சுப் பொருட்கள்.
-->