கொண்ட வாகை
அறிவியல் பெயர் :
அல்பைசியா புரோசிரா
பொதுப்பண்பு :
- இது அகன்ற கிளைகளையுடைய பெரிய இலையுதிர் மரமாகும்.
- மரப்பட்டையானது மஞ்சள் அல்லது பச்சை நிறமுடையது.
- இலைகள் நல்ல பிரகாசமான சிவப்பு நிறத்தில் காணப்படும்.
- மலர்கள் பச்சை நிறம் கொண்டது.
- நெற்றானது சிவப்பு கலந்த சபம்பல் நிறமுடையது.
- ஒவ்வொரு நெற்றிலும் 6 – 12 தட்டையான சாம்ல் நிற விதைகள் காணப்படும்.
பரவல் :
- இவை இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
வாழிடம் :
இலையுதிர்காடுகள் மற்றும் சதுப்புக் காடுகளில் வளரும் மரமாகும்.
மண் :
செம்மண், வண்டல் மண் மற்றும் களிமண்ணில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 5000 மி.மீ
வெப்பநிலை :
37 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- நீர்தேங்கியிருக்கும் நிலப்பகுதியில் வளராது
- பனியை மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.
- மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக வளரக் கூடியது.
உயரம் :
18.24மீ
- சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
- நெற்றானது மே - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- நிழலில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் குறைவான முளைப்புத்திறன் கொண்டவை. விதைகள் எண்ணெய் வித்து வகையானவை .
- ஒரு கிலோ விதையில் தேராயமாக 17000 விதைகள் இருக்கும்.
- விதைகளை 10 வருடங்கள் வரை அறை வெப்பநிலையில் சேமித்து வைத்திருக்க முடியும்.
- பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய விதைகள் ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 3 – 4 நாட்களில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்ந்தபின் நாற்றுகள் பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
- விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- நாற்றுகளை நிழலில் வைக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
- குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- உவர் நிலங்களில் 60 x 60 x 80 செ.மீ அல்லது 60 x 60 x 120 செ.மீ இடைவெளியை பயன்படுத்துவது சிறந்ததாகும்.
- மரப்பண்ணையானது களைகள் அற்றதாக இருக்க வேண்டும்.
- நாற்றுகள் நடப்பட்ட பின் மண்ணை உழுதல் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன் மரம் விலை குறைவான கட்டிட கட்டுமானத்திற்கும், மரச்சாமான்கள் செய்யவும், உள் கட்டிட கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
- வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும், படகு தயாரிக்க, மாட்டுவண்டி பாகங்கள் தயாரிக்க, மற்ற மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.