முந்திரி
அறிவியல் பெயர் :
அனகார்டியம் ஆக்சிடென்டேல்
பொதுப்பண்பு :
- அகன்ற கிளைகளையுடைய மிதமான அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
- இலைகள் அடுக்கு முறையில் அமைந்திருக்கும். பச்சை நிறமுடையது.
- பூக்கள் வெளிர் பச்சை முதல் சிவப்பு நிறமுடையது.
- இதன் கனிகள் போலிக்கனி வகையை சேர்ந்தது.
- ஒரு கனியில் ஒரு வதை மட்டுமே இருக்கும்.
பரவல் :
- முந்திரிக்காக இம்மரம் பரவலாக பயிரிடப்படுகிறது.
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.
மண் :
Prefers deep, fertile, sandy soils but will grow well on most soils except pure clays or soils that are otherwise impermeable, poorly drained or subject to periodic flooding.
மண் pH :
4.8 – 8.7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 3500 மி.மீ
வெப்பநிலை :
17 - 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் கடற்கரை சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இம்மரம் வளர அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது.
- பனியை தாங்கி வளரும் தன்மையுடையது.
- அதிகப்டியான மழை தேவை.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- மறுதாம்பு உற்பத்தி மூலம் தழைத்து வளரக்கூடியது.
- விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 8 மாதங்கள் வரை பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- மிதமான அளவுடைய முந்திரிகள் விதைக்காக பயன்படுத்தப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 150 – 200 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 70 - 80 சதவிகிதம் ஆகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழிக்குள் மேல் மண் மற்றும் எரு கொண்ட கலவை இடப்படுகிறது.
- ஒட்டு முறை நாற்று வளர்ப்பில் ஒட்டுத்தண்டானது நிலத்திலிருந்து 10 – 15 செ.மீ உயரத்திலிருக்குமாறு ஒட்டப்படுகிறது.
- அவ்வப்போது பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
- குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- சாதாரணமான நடவிற்கு குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 7 x 7 மீ என இருக்க வேண்டும்.
- அதிகப்படியான பண்ணை உற்பத்திக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- மரம் 1 மீ உயரம் வளரும் வரை பக்க கிளைகளை ஆகற்ற வேண்டும்.
- இறந்த மற்றும் நோய் தாக்கிய மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.
- மரம் நடப்பட்ட 4 ம் ஆண்டிலிருந்து காய்க்க துவங்குகிறது.
- அறுவடையானது பிப்ரவரி – மே மாத கால இடைவெளியில் செய்யப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
- தட்டைபயிறு, கொண்டை, நிலக்கடலை, அன்னாச்சிபழம் ஆகியவை ஊடுபயிராக பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- முந்திரிக்காக இம்மரம் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
- இதன் ஓட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகின்றது.
- விதையிலிருந்து எடுக்கப்படும் தவிடானது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இதன் மரம் மரச்சக்கரங்கள் செய்யவும், மீன்பிடி படகு தயாரிக்கவும், மரச்சாமான்கள் தயாரிக்கவும் மற்றும் உள் கட்டுமான பணிகளுக்கும் அதிகளவு பயன்படுகிறது.
தீவனம்:
- புண்ணாக்கு தீவனமாக பயன்படுகிறது.
- விதை உறையானது கோழித்தீவனமாக பயன்படுகிறது.
எரிபொருள்:
- இதன் கட்டையானது எரிபொருளாகவும் கரி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.
- மேலும் இதன் கொட்டையின் ஓடானது எரிபொருளாக பயன்படுகிறது.
நார்:
- மரக்கூழானது பெட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது.
-->